பேற்று நோவடங்கி உடல்பரப்பிக்
கிடக்கிறது நிலம்
கரு ஈன்ற அசதிப் பெருமூச்சாய் விம்மி அலைகிறது காற்று
உயிர்ப் பிசுக்கின் ஒளிர்வுடன்
ததும்புகிறது கானல்
கதிரிலிருந்து உதிர்ந்து மண்ணுக்குள் உறங்கும்
ஆதரவற்ற வித்துக்கள் திசையதிர விசும்புகின்றன
அவற்றைச் சமாதானம் செய்கின்றன
வரப்பின்மேல் குந்தியமர்ந்திருக்கும்
சில பாடல்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக