பக்கங்கள்

சனி, 27 ஜூன், 2020

அய்யப்பப் பணிக்கரின் கவிதை




                                    வருகை 



தொலைவிலுள்ள கிராமத்திலிருந்து வந்த கிழவர் சொன்னார்:
எங்கள் வீட்டருகில் ஒரு குழந்தை இறந்துபோயிற்று
நான் சொன்னேன்:
மக்கள்தொகைக் கணக்கெடுப்பாளருக்கு வேலை மிச்சம்.

காய்கறிக்காரப் பெரியம்மா முன் தினம் வராமலிருந்த காரணம்.
என்னைக் கட்டியவனின் மருமகன் போய்விட்டான்
நான் சொன்னேன்:
கட்டியவன் போகவில்லைதானே, அவரும் போயிருக்கலாம்.

நாளிதழில் படத்துக்குக் கீழே:
முப்பத்தைந்து ஆண்டு பாராட்டத் தகுந்த தேசசேவைக்குப் பிறகு
குஞ்ஞுகுஞ்ஞு பரலோகம் அடைந்தார்.
நான் இட்டுக்கட்டி வாசித்தேன்:
இனி சேவையை அங்கே தொடரலாம்.

கடைசியில், என் வீட்டுக்கே அது வந்தபோது
எனக்குப் பேச்சில்லை;
அது புறப்பட்டதே இங்கே வருவதற்குத்தான்.  (1991) 

அய்யப்பப் பணிக்கர் 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக