ஏழுகடல் நீந்திவந்த மீனிடம்
கண்ணாடிப்
பேழைக்குள்ததும்பும் நீரைக்காட்டி
ஏழைவிடப் பெரிய சமுத்திரம்
என்கிறாய்
எண்திசை கடந்து வந்த
பறவையிடம்
கம்பிக்குள் சிக்கிய
வானைக்காட்டி
அளவற்ற ஆகாயம் என்கிறாய்
மூடாத விழிகளால்
சிரிக்கிறது மீன்
படபடக்கும் சிறகுகளால்
சிரிக்கிறது பறவை
விழிமூடி
வெளியைத் துழாவிச்
சிரிக்கிறேன் நான்
நானே அந்த நீச்சல்
நானே அந்தப் பறத்தல்.
(மே 2014 )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக