திங்கள், 22 பிப்ரவரி, 2010

உ ன து பா த ங் க ள்


















ன் முகத்தைப் பார்க்க முடியாதபோது
உன் பாதங்களைப் பார்க்கிறேன்.
வளைந்த எலும்பாலானவை உன் பாதங்கள்,
திடமான சின்னப் பாதங்கள்.
அவையே உன்னைத் தாங்குகின்றனவென்றும்
உனது இனிய பாரம்
அவற்றின் மேல்தான் உயர்கிறதென்றும்
எனக்குத் தெரியும்.
உன் இடை, உன் மார்பகங்கள்,
உன் முலைக்காம்புகளின் இரட்டைச் சிவப்பு,
சற்றுமுன் பறந்துபோன
உன் கண்களின் கூடுகள்,
உன் விரிந்த கனி வாய்,
உன் செந்நி¢ற முடிச்சுருள்.
ஆனால்,
நான் உன் பாதங்களைக் காதலிக்கிறேன்.
ஏனெனில்,
அவை பூமியிலும் காற்றிலும்
நீரிலும் நடந்தன-
என்னைக் கண்டடையும்வரை.


பாப்லோ நெரூதா

3 கருத்துகள்:

  1. பகிர்வுக்கும் மிகச்சிறந்த மொழிபெயர்ப்புக்கும் நன்றி
    //..என்னைக் கண்டடையும்வரை// கடல் கடந்து இருக்கும் உணர்வுகள் கவிதையின் வழியாக நம்மை பிடித்து கொள்கிறது. கவிஞர்
    இறுதிவரியில்(லும்) மிளிர்கிறார்.

    பதிலளிநீக்கு
  2. மிக அழகான கவிதை, நேர்த்தியான வார்த்தை தேர்வுகளோடு கூடிய அற்புதமான மொழிபெயர்ப்பு

    பதிலளிநீக்கு