ஞாயிறு, 9 அக்டோபர், 2011

நதிக் காட்சி
கரையொதுக்கிக் கட்டப்பட்ட
அசையும் தோணிக்குள்
மிஞ்சிய மழைநீர்
அதில்
சிலிர்த்துக் கொண்டிருக்கிறது நிலவு
பூமிக்கு ஒளிபொழிந்த கருணையில்.

பக்கம் 175 ;பூமியை வாசிக்கும் சிறுமி (2007)