வியாழன், 30 ஏப்ரல், 2015

நாளையின் பாடல்கள்பேற்று நோவடங்கி உடல்பரப்பிக்  கிடக்கிறது நிலம்
கரு ஈன்ற அசதிப் பெருமூச்சாய் விம்மி அலைகிறது காற்று
உயிர்ப் பிசுக்கின் ஒளிர்வுடன்  ததும்புகிறது கானல்
கதிரிலிருந்து உதிர்ந்து மண்ணுக்குள் உறங்கும்
ஆதரவற்ற வித்துக்கள் திசையதிர விசும்புகின்றன
அவற்றைச் சமாதானம் செய்கின்றன 

வரப்பின்மேல்  குந்தியமர்ந்திருக்கும் சில  பாடல்கள்.