ஞாயிறு, 17 மே, 2015

எப்போதும் கடல்எல்லாக் காலத்திலும் அமைதியாக அடங்கியிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் கொந்தளித்துக் குமுறுவதில்லை
எல்லாக் காலத்திலும் உற்சாகமாகப் பாடிக் கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் நிசப்தமாக முணுமுணுத்துக் கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் ஒளிசிதற அலைந்து கொண்டிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் அந்தகாரத்தில் ஒளிந்திருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் மூழ்கடித்துக் கொல்வதில்லை
எல்லாக் காலத்திலும் உயிர்ப் பிச்சையளித்துக் கரையேற்றுவதில்லை
எல்லாக் காலத்திலும் கடலுக்குள் மட்டுமே கடலிருப்பதில்லை
எல்லாக் காலத்திலும் கையளவு கடலொன்று
கடலில் இருப்பதுபோலவும் கடலில் இல்லாதது போலவும்
கைக்குள் இருக்கிறது
எனினும்
எல்லாக் காலத்திலும் கடலிலும்
கடல் இருந்துகொண்டேயிருக்கிறது.


13 மே 2015