வியாழன், 7 மே, 2015

மௌனமாக வந்தது
காதல் மௌனமாக வந்தது
வெறுமொரு கனவுபோலத் தோன்றியது
எனவே   நான்
காதலை உள்ளே வரவேற்கவில்லை
காதல் கதவைத் தாண்டிச் சென்றதும் விழித்தெழுந்தேன்
அந்த உடலற்ற கனவின் பின் விரைந்து செல்கையில்
இருளில் கரைந்தது அது
காதலின் தூரத்து வெளிச்சம்
மிஞ்சியது உதிரச் சிவப்புக் கானலாக.

- ரவீந்திர நாத் தாகூர். ( Sehnai 1937 )