புதன், 11 மே, 2016

மலையாளச் சிறுகதை லீலை


உண்ணி ஆர்.
சில ஆடுகளும் கம்பளித்தொப்பி போட்ட மனிதர்களும் அவர்களுக்கிடையில் கோவிலில் மாலை தொடுக்கும் கல்யாணி யம்மாவும் ஒரு பெரிய கப்பலின் மேல்தளத்தில் நின்று பாட்டுப் பாடிக்கொண்டு ரப்பர்  தோட்டங்களுக்கு இடையில் போவதாகக் கனவு கண்டதற்குக் காரணம், இரண்டு வருடங்கள் கப்பலில் வேலை செய்த குன்னேலே பாப்பனின் மகன் ஜோயியைப் பார்த்து விட்டு வந்து படுத்ததாக இருக்கலாம். நடக்கவே முடியாத இந்த வாரஸ்யார் 1 எப்படி இதில் ஏறினார்  என்று நான் கப்பலின் முனையில் நின்று கொண்டிருந்த முறுக்கு மீசைக் காரனிடம் கேட்டுக்கொண்டிருந்தபோதுதான் யாரோ விடாமல் கதவைத் தட்டுவது கேட்டது.

இந்த நடு ராத்திரியில் யார் இது என்று சொல்லிக் கொண்டே பத்மினிதான் முதலில் துள்ளி எழுந்தாள்.  நான் எழுந்திருப் பதற்குள்ளாகவே அவள் கூந்தலை முடிந்து விளக்கையும் போட்டு முன்பக்கமாக நடந்து போயிருந்தாள். கனவில் வந்த கப்பல் பயணிகளை விட்டுவிட்டு அவிழ்ந்து கிடந்த கைலியைத் தேடி எடுத்து நானும் பின்னால் போனேன். முன்வாசல் கதவு தட்டலின் வலிமையால் வலிப்பு வந்ததுபோல நடுங்கிக் கொண்டிருந்தது.

மனைவி எனக்கு அருகில் ஒட்டி நின்று கொண்டு யாரென்று கேட்கும்படி மெதுவாகச் சொன்னாள். ஒரு நொடி அவளைப் பார்த்து விட்டு உரக்கக் கேட்டேன்: 'யாரது?'

கேள்வி கதவைத் தாண்டி அந்தப் பக்கமாகப் போனதும் நடுக்கம் நின்றது: 'இது நான் தான்'.

அந்த பதில் இந்தப் பக்கம் வந்து சேர்வதற்குள்   ,'ஹூம், குட்டியப்பனாஇனி இந்த நடு ராத்திரியில் என்ன ஆதாயத்தைக் கொண்டு வந்திருக்கிறானோ' என்று சொல்லிக்கொண்டே மனைவி படுக்கப்போனாள். நான் கதவைத் திறந்தேன். தலையில் ஒரு துண்டைக் கட்டிசட்டை போடாமல், இடுப்பில் கள்ளி முண்டைச் 2 சுற்றி ஆறு பாட்டரியுள்ள டார்ச்சைப் பிடித்துக் கொண்டு முகம் நிறைந்த சிரிப்புடன் குட்டியப்பன் நின்று கொண்டிருக்கிறான். என்ன விஷயம் என்று கேட்பதற்குள்ளாகவே குட்டியப்பன் என் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு முற்றத்தில் இறங்கினான். பிறகு என்னையும் இழுத்துக் கொண்டு பரபரவென்று ஒரு நடை. நடைக்கிடையில் விஷயத்தைச் சொல்லு குட்டியப்பா என்று நான் சொல்லிக் கொண்டிருந்தாலும் நடையை நிறுத்தவில்லை. விஷயத்தைச் சொல்லவுமில்லை. அந்த நடை தெக்கே பறம்பிலிருக்கும் சாம்பமரத்தின் அடியில் போய்த் தான் முடிந்தது. நான் மூச்சிரைத்துக்கொண்டு சாம்பமரத்தில் சாய்ந்து நின்றேன்.குட்டியப்பன் அப்போதும் என் கையிலிருந்து பிடியை விடவில்லை.

'' பிள்ளேச்சா, எனக்கு போகம் பண்ணணும்'' குட்டியப்பன் இரைத்துக் கொண்டு சொன்னான்.

'' யாரை? இந்த ராத்திரியில் நான் வேணுமாக்கும்?'' எனக்குக் கோபம் வந்தது.

'' என்னோட பிள்ளேச்சா, சும்மா விளையாடாதே'' குட்டியப்பன் டார்ச்சால் முதுகைச் சொறிந்து கொண்டு சொன்னான். ''இது ஒரு பிரத்தியேக தினுசான போகம். அதுக்கு  ஏற்பாடு பண்ணணும்''

''என்ன ஏற்பாடு?'' எனக்குப் புரியவில்லை.

குட்டியப்பன் என் கையிலிருந்த பிடியை விட்டுவிட்டு கொஞ்ச நேரம் பேசாமல் நின்றான். பிறகு சாம்பமரத்தின் மீது டார்ச் அடித்துப் பார்த்தான்.

''அங்கே யாரும் உட்கார்ந்திருக்கல. விஷயத்தைச் சொல்லு, குட்டியப்பா''  என்னுடைய கோபத்தின் அளவு அதிகரித்து வருவது குட்டியப்பனுக்கும் புரிந்தது.

''அது, ஒரு கொம்பன் யானையோட தும்பிக்கை மேலே ஒரு பெண்ணை துணியில்லாமல் சேர்த்து நிறுத்தினா எப்படி இருக்கும்?''

நான் எதுவும் சொல்லவில்லை. ''பார்த்தா நெற்றிப்பட்டத்தை அவிழ்த்து வெச்ச மாதிரி இருக்கணும். அப்புறம் யானையோட ரெண்டு கொம்புகளையும் பிடிச்சுகிட்டு தும்பிக்கையோடே சாஞ்சிருக்கிற பெண்ணை சம்போகம் பண்ணணும்''

ஒரு நொடி இழுத்து மூச்சு விட்டேன். ஒரு வவ்வால் என் தலைக்குமேல் பட்டும் படாமலும் பறந்து போனது.

''பிள்ளேச்சா'' குட்டியப்பன் மெதுவாகக் கூப்பிட்டான். நான் முனகினேன்.

'' ஏன் எதுவும் சொல்ல மாட்டேங்கிறே?'' குட்டியப்பன் கேட்டான்.

''இதெப்படி நடக்கும் குட்டியப்பா?'' எனக்குள்ளேயிருந்த சந்தேகத்துக்கே அவ்வளவு சந்தேகமிருந்தது.

''அதெல்லாம் நடக்கும், பிள்ளேச்சா. மனுஷன் சந்திரன்லே தண்ணி தேடிப் போறான். பின்னே இதுவா கஷ்டம்'' என்றான் குட்டியப்பன். ''பிள்ளேச்சன் என் கூட நின்னாப் போதும்''.

ஒரு பேய்க் குயிலின் கத்தல் மேலாக வந்து போயிற்று.

குட்டியப்பனை வாசல்வரை கொண்டுபோய் விட்டுவிட்டு திரும்பி வந்தபோது மனைவி கேட்டாள்:'' குட்டியப்பனின் புதிய ஏற்பாடு என்ன?''

'' , ஒரு யானை வாங்கணும்னு சொல்ல வந்தான்'' நான் பத்மினிக்கு முகம்கொடுக்காமல் சட்டென்று கட்டிலில் படுத்தேன்.

அப்பன் சம்பாதிச்சு வெச்சது முழுசையும் அழிக்கறதுக்காகவே ஒவ்வொண்ணு பொறந்திருக்கும். ரொம்பப் படிச்சிருக்குனு சொல்லிட்டு ஏதாவது பிரயோஜனமிருக்கா?'' பத்மினி மறுபடியும் என்னென்னவோ முணுமுணுத்துக் கொண்டிருந்தாள். நான் எதுவும் சொல்லவில்லை. ரப்பர் தோட்டத்தின் வழியாகப் போன கப்பலுக்குப் பின்னால் ஓடிப் பார்த்தால் என்ன என்று யோசித்துக் கண்களை மூடிப் படுத்தேன்.

மனைவி வேலைக்குப் போன பிறகுதான் தெருச் சந்திக்குப் போனேன். அனியன் பிள்ளேச்சனின் டீக்கடைக்குள் நுழைவதற்கு முன்பே குட்டியப்பனின் வில்லிஸ் ஜீப் முன்னால் வந்து பிரேக் போட்டு வண்டியிலே ஏறு பிள்ளேச்சாஎன்று உறுமியது. அதைச் சொன்னது ஜீப்பா குட்டியப்பனா என்று பார்க்காமல் ஜீப்பில் ஏறினேன். தெருச் சந்தியைத் தாண்டியதும் குட்டியப்பன் சொன்னான்: '' கிடங்ஙூரிலே ஒரு யானை சோமன்நாயர் இருக்கிறார். இந்தப் போக்கில் அவரை ஒரு பிடிபிடிக்கலாம்''.

''அவர் சம்மதிப்பாரா?'' நான் கேட்டேன்.

''அது இப்ப சம்மதிக்காம என்ன?'' குட்டியப்பன் நீளமாக ஒரு பீப்பியடித்து விட்டுச் சொன்னான்: ''காசுதானே கொடுக்கிறோம்''

வண்டி ஓடிக்கொண்டிருந்தது. குட்டியப்பன் யானைகளைப் பற்றியும் அவற்றின் குண நலன்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான். இடையில் வண்டியும் என்ன வெல்லாமோ சொன்னபோது நான் குட்டியப்பனை ஏறிட்டுப் பார்த்தேன்.', அது பரவாயில்ல. அப்பப்ப இவ இப்படி எதையாவது உளறிட்டிருப்பா என்று குட்டியப்பன் சொன்னான். பிறகு நான் அதைக் கவனிக்கவில்லை.

கிடங்ஙூர் வந்து சேர்ந்ததும் குட்டியப்பன் கேட்டான்: ''சோமன் நாயரைப் பார்க்கிறதுல பிள்ளேச்சனுக்கு ஏதாவது சிரமமிருக்கா?''

''எனக்கென்ன சிரமம். ஒரு சிரமமுமில்ல'' நான் சொன்னேன்.

''அப்படியில்ல, உங்க பெண்டாட்டியோட சொந்தக்காரங்கல்லாம் இங்கேதானே இருக்காங்க. சொல்லிட்டு வர்றப்ப ஒண்ணுக்குப் போறப்ப தெறிச்ச ஏதாவது உறவு இருந்துச்சுன்னா?''

அதுவும் சரிதானே என்று  ஒரு நிமிடம் யோசித்தேன்: '' என்னை அறிமுகப்படுத்தறப்போ வேற ஏதாவது சொன்னாப் போதும்''

சோமன் நாயரின் பறம்பில் 3 தென்னைமரங்களைவிட அதிகமாக யானைகள்தாம்  இருந்தன. தரையில் உரிக்கப்படாத தேங்காய்களைப்போலப் பிண்டங்களும். 4

சோமன் நாயரை எதிர்பார்த்து அரைமணி நேரமாகக் காத்திருந்தோம். குளித்து முடித்து பூஜையிலிருக்கிறார் என்று அவர் மனைவி வந்து சொன்னாள். பறம்பில் நிற்கும் ஒரு பெரிய கொம்பனைப் பார்த்து குட்டியப்பன் கேட்டான்: '' அவனெப்படி?''

நான் பார்த்தபோது அந்தக் கொம்பு இப்போதே வந்து கண்ணைக் குத்துமென்று பயந்தேன்.

''எப்படியிருக்கு? மூணு பாப்பான்களைக் 4 கொன்னதாக்கும்'' அதைக் கேட்டபோது என்னுடைய உள்ளம் குமைந்தது.

''இதைத்தான் கொடுப்பதாக இருந்தா?''  நான் கேட்டேன்.

''அப்படீன்னாத்தானே ரசமாயிருக்கும்.நம்ம குணம் ஆசானுக்குப் பிடிபடும்''
கால்களுக்கு இடையில் உதடுகளைப் பிளந்துகொண்டு நிற்கும் கைகால்களூம் சிறகுமில்லாத அதிசயப் பிறவியைப் பார்த்துக் கொண்டு குட்டியப்பன் சொன்னான்.

கொஞ்ச நேரம் கழிந்ததும் சோமன் நாயர் வந்தார். நெற்றியில் சந்தனத்தால் தீற்றிய சமக் குறிகள். நடுவில் செந்தூரத்தால் பூஜ்ஜியம். சோமன் நாயரைப் பார்த்ததும் குட்டியப்பன் சாஷ்டாங்கமாகக் காலில் விழுந்தான். சோமன் நாயர் அதை எதிர்பார்க்கவில்லை. குட்டியப்பன் என்பதால் நான் எதிர்பார்த் திருந்தேன். சோமன் நாயரின் முகத்தில் மாறிமாறி வரும் பாவங்களைப் பார்த்தபடி சும்மா நின்றுகொண்டிருந்தேன். சோமன் நாயர் குட்டியப்பனை எழுப்பி உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்தேன். குட்டியப்பன் உட்காராமல் குனிந்து வணங்கி நின்றான். சோமன் நாயருக்கு எதுவும் புரியவில்லை என்று எனக்குப் புரிந்தது. கொஞ்ச நேரம் கழித்து வந்த விஷயம் என்னவென்று சொல்லும்படிக் கேட்டார். எதற்கு வந்தோம் என்றல்ல; எங்கிருந்து வந்தோம் என்று சொல்லிக் கொண்டு தான் குட்டியப்பன் தொடங்கினான். என்னைப் பற்றி சொன்னபோது நான் திருச்சூரிலிருக்கிற யானை நேசன் என்றும் மிக நல்ல யானை சோமன்நாயருடையதுதான் என்று சொன்னேன் என்பதாகவும் குட்டியப்பன் சொன்னான். என்னிடம் அவர் எதுவும் கேட்டு விடக் கூடாதே என்னுடைய வாசுதேவபுரத்தப்பா என்று அப்போதே பிரார்த்தித்தேன். 'என்னா', 'அறியத்தில்லா' முதலான கோட்டயத்தின் எல்லா ஏற்ற இறக்கங்களையும்  நாக்கில் எழுதி வைத்திருக்கும் எனக்கு வடக்கனின் கவணை போல நீளுகிற மொழி எப்படி  வரும்? நான் பேசாமலிருந்தேன். நல்லவேளையாக சோமன் நாயர் என்னிடம் எதுவும் கேட்கவில்லை. மாதங்கலீலை முதல் நாட்டுப்புற யானைவைத்தியம்வரை குட்டியப்பன் சோமன் நாயரிடம் பேசிக்கொண்டிருந்தான். குட்டியப்பனின் அறிவுச் சுரங்கத்தின் முன்னால் நாயர் திறந்த வாயுடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து நான் சும்மா உட்கார்ந்திருந்தேன். கடைசியில் சோமன்நாயரை ஒதுங்க வைத்து விட்டு குட்டியப்பன் என்னென்னவோ சொல்வதைப் பார்த்தேன். இடையில் ஒன்றிரண்டு முறை கயிறு அவிழ்ந்து விழுவது போல சோமன் நாயரின் காலில் விழுந்தான்.அப்போதெல்லாம் இல்லை இல்லை என்ற அர்த்தத்தை வலுப்படுத்திக் கொண்டு சோமன்நாயர் இரண்டு கைகளையும் வெண்சாமரமாக்குவதையும் பார்த்தேன்.

கிடங்ஙூரிலிருந்து பாலாவுக்குப் வழிபிரியும் இடத்தில் வண்டியை சட்டென்று நிறுத்தி விட்டு குட்டியப்பன் கேட்டான்: ''அப்போ பிறகு என்ன செய்யலாம்?''

நானும் இனி என்ன செய்யலாம் என்ற விதமாகக்குட்டியப்பனைப் பார்த்தேன்.

இதற்கிடையில் வண்டி ஒருமுறை செருமியது. குட்டியப்பன் காதைக் குவித்தான். பிறகு என்னைப்பார்த்துச் சொன்னான்:

'அவ சொல்றா, தோ அந்த ஷாப்புக்குள்ளே ஏறுன்னு'' நான் இடப் பக்கமாகப் பார்த்தேன். ஷாப் எங்களைப் பார்த்துச் சிரிக்கிறது.

ஷாப்புக்கு வெளியே இருந்த பெட்டிக் கடையின் சாய்த்துக் கட்டிய ஓலைக்கீற்றுக்குக் கீழே நிற்கும்போது குட்டியப்பனின் தொண்டைக் குழியிலிருந்து புளித்த கள்ளின் நெடியுள்ள ஏப்பம் அவசரமாக வெளியேறியது.

''பிள்ளேச்சா, நாம பீகாருக்குப் போனா என்ன?'' குட்டியப்பன் கேட்டான்.

குட்டியப்பன் பீகாருக்கு வண்டியேறுவான் என்ற நிச்சயயமி ருந்ததால் நான் சொன்னேன்: '' சம்பக்கரைக்கும் கூட ஒரு தடவை போகலாம்"'

பழக்குலைகளுக்கு இடையிலிருந்து பெட்டிக்கடைக்காரனின் ஆர்வம் எட்டிப் பார்த்தது.''திருமுறதுக்கா?'' 6

''இல்ல. ஒரு யானை வேணும்''

ஆர்வத்துக்கு உட்கார முடியவில்லை.

''எழுநள்ளிப்புக்காகவா?'' 7

''எழுநள்ளிப்புக்கொண்ணுமில்ல. சும்மா நிறுத்தி வைக்க'' நாக்கில் சுண்ணாம்பைத் தேய்த்துகொண்டு குட்டியப்பன் சொன்னான்.

''அப்படீன்னா மணர்காட்டுக்கு விடுங்க. அங்கே கருந்தேக்குபோல ஒருத்தன் வந்திருக்கான். நம்ம ராமப்பணிக்கர் சேட்டன் போய்ப் பார்த்துட்டு நல்ல லட்சணம்னு சொன்னாரு''

''எந்த ராமப்பணிக்கர்?'' குட்டியப்பனின் ஆர்வமும் தலைநீட்டியது.

''நம்ம ஏற்றுமானூர் நீலாண்டனோட முதலாவது பாப்பானா இருந்தாரில்ல ராமப்பணிக்கர். தோ, இந்த வளைவு முடியிற இடத்தில்தான் அவரோட வீடு,என்னா விஷயம்னாலும் ஆசாமி கிட்ட கேட்டாப் போதும்''

குட்டியப்பன் என்னை ஒருமுறை பார்த்தான். நான் குட்டியப் பனையும் ஒருமுறை பார்த்தேன்.

பழக்குலைகளுக்கு இடையிலிருந்த தலை ஓட்டுக்குள் இழுபட்டது.

ஒரு குப்பி பனங்கள்ளும் இரண்டு கட்டு பீடியும் கொஞ்சம் வெற்றிலை புகையிலையும் வாங்கிக் கொண்டுதான் பணிக்கர் வீட்டுக்குப் போனோம். பணிக்கர் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தார். கையில் பழைய ஒரு லாந்தர். கழற்றுகிறாரா மாட்டுகிறாரா என்று தெரியவில்லை. துரும்பு படர்ந்த லாந்தர் அது. பற்றவைத்தால் என் உடம்பு முழுவதும் சூடேறி நான் செத்துப் போய்விடுவேன் என்ற சங்கடம் பாவம் அதற்கிருந்தது. வாசலில் நின்று குட்டியப்பன் உரக்கக் கூப்பிட்டான் ''பணிக்கரு சேட்டா..."'

லாந்தரைக் கீழேவைத்து விட்டுப் பணிக்கர் பார்த்தார். ''நாங்க குடமாளூரிலேர்ந்து வர்றோம்'' கையிலிருந்த காணிக்கைகளை பணிக்கரிடம் கொடுத்து விட்டுச் சொன்னான்: ''நீலாண்டனைக் கொண்டு வரும்போது பார்த்திருக்கேன். கரிகுளங்ஙரையிலேயும் வாசுதேவபுரத்திலேயுமெல்லாம் சேட்டந்தானே வந்துட்டிருந்தீங்க’’

கையிலிருந்த பொட்டலத்தை ஒரு மூலையில் ஒதுக்கி வைத்து விட்டு பணிக்கர் சொன்னர்: '' இப்போதானே வடக்கேயிருந்து யானையைக் கூப்பிட்டு வர்றது. நம்ம யானைக்கெல்லாம் இது இல்லாதமாதிரி''


''பின்னே இல்லயா?'' குட்டியப்பன் அதை ஒத்துக்கொண்டான்.

பணிக்கர் துண்டால் அரைத் திண்ணையிலிருந்த  தூசியைத் தட்டினார். தூசி ஓடியது.நாங்கள் அங்கே உட்கார்ந்தோம்.

''குடமாளூரிலே எங்கே?'' பணிக்கர் என்னிடம் கேட்டார்.

'' நான் தெக்கேதிலாக்கும் இவர் வரத்தன். 8 கூத்தாட்டுக் குளத்துக்காரன்'' குட்டியப்பன் சொன்னான்.

''தெக்கேதில்னா எங்கே வரும்?''

'' , அது வடக்கேருந்து பாண்டவத்துக்கு எறங்குற வழியில''

பணிக்கர் ஒருமுறை இருமி சளியை நீட்டித் துப்பினார்.

''என்னாச்சு?'' குட்டியப்பனின் ஆர்வம் நீண்டு போவதைப் பார்த்தேன்.

'' குளிருதான்'' மார்புக் கூட்டை உலுக்கிக் கொண்டு மறுபடியும் இருமியபின் பணிக்கர் 'அடியே' என்று நீட்டி அழைத்தார். அந்த அழைப்புப் போனவழியில் நாணும் ஒருமுறை பார்த்தேன். சளி புரண்ட குரல் உள் கதவு வழியாக  நுழைந்து எங்கோ போனது.கொஞ்ச நேரம் கழித்து ஒரு பெண்மணி மருத்தையும் தண்ணீரையும் எடுத்துக் கொண்டு வந்தார். ஒன்றிரண்டு மாத்திரைகளை சாப்பிட்டு விட்டு பணிக்கர் கிளாஸைத் திருப்பிக் கொடுத்தார். குட்டியப்பனின் நோட்டம் அவரைப் பின் தொடர்ந்து நடந்து போய் பணிக்கரைத் திரும்பிப் பார்த்தபோது பணிக்கர் உதட்டைத் துடைத்துக் கொண்டு சொன்னார்: ''மகளில்ல. பெண்டாட்டி. வர்றவங்க போறவங்க எல்லாம் மகளான்னு கேப்பாங்க. நீங்களும் அப்படிக் கேட்க வேண்டாம்னு நெனச்சு சொன்னேன்''

குட்டியப்பன் உரக்கச் சிரித்தான்.

''நான் இந்த யானையைக் கூட்டிகிட்டு நடந்து நடந்து வீட்டில ஒருத்தி இருக்கிற விஷயத்தை மறந்தே போனேன்'' பணிக்கர் ஒரு பீடியைப் பற்ற வைத்துவிட்டுச் சொன்னார்: ''அவ ஒரு நாள் ஒருத்தன் கூடப் போயிட்டா. அப்புறம் எனக்கு முடியாமப் போனதும் இதைக் கட்டிகிட்டேன். பாத்துக்கிறதுக்கு யாராவது வேணுமில்ல?''

''என்னோட பணிக்கருசேட்டா, என் பெண்டாட்டியும் இப்படி ஒரு நாள் ஒருத்தனோட போயிட்டா'' குட்டியப்பன் பணிக்கர்சேட்டனைப் பார்த்துக்கொண்டு இப்போதே அழுதுவிடுவான்போலச் சொன்னான்: ''அப்புறம் ஒருத்தியைக் கட்டிகிட்டேன். அவளும் போயிட்டா''

நான் சுவரிலிருந்த தெய்வங்களைப் பார்த்தேன். அவர்களும் என்னைப் பார்த்தார்கள். நாங்கள் சேர்ந்து குட்டியப்பனைப் பார்த்தோம். குட்டியப்பன் எங்களைப் பார்த்துக் கண்ணடித்தான்.

''அய்யோ, அது ஏன் கொழந்தே அப்படியாச்சு? '' பணிக்கர் நாற்காலியை இன்னும் பக்கத்தில் இழுத்துப் போட்டார்.

''எல்லாம் ஜாதகதோஷம், வேறே என்ன சொல்ல?'' குட்டியப்பன் பணிக்கரின் காதருகே போய் குரலைத் தாழ்த்திக் கொண்டு ''சேட்டா, சத்தியமா சரியான உடம்பு சுகத்தை அனுபவிக்கல''

குட்டியப்பனின் முகத்தைப் பார்த்ததனாலாக இருக்கலாம் பணிக்கருக்கு வருத்தமாக இருந்தது.எல்லாம் சரியாகி விடும் என்று குட்டியப்பனிடம் சொன்னார். ஆமாம், எல்லாம் சரியாகி விடும் என்று குட்டியப்பனும் சொன்னான்.

குட்டியப்பன், அவனாகவே பணிக்கருக்கு ஒரு கிளாஸ் கள்ளை ஊற்றிக் கொடுத்தான். கள்ளின் வெறி நாக்கைக் தொட்டதும் பணிக்கரின் கண்கள் மின்னத் தொடங்கின. குப்பியின் அடிப் பாகத்தில் கள்ளின் நுரை அஸ்தமிக்கத் தொடங்கியபோது குட்டியப்பன் சொன்னான்: ''சேட்டா, வந்தது வேறே ஒரு விஷயம் சொல்றதுக்குத்தான்''

பணிக்கர் முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு குட்டியப்பனைப் பார்த்தார்.

''எனக்கு ஒரு யானை வேணும். ஒரு நாளுக்கு இல்லேன்னா ஒரு மணி நேரத்துக்கு'' குட்டியப்பனின் குரலிலிருந்த வேண்டுகோள் பணிக்கரின் காலடியில் தலை குனிந்து நின்றது.

''என்னாத்துக்கு?'' பணிக்கர் கேட்டார்.

குட்டியப்பன் மிச்சக் கள்ளையும் கிளாஸில் ஊற்றினான். குப்பிக்கு வெளியே தப்பிக்க வந்த கள்ளுத்தனத்தை திரும்பிப் போகச் சொல்லி விட்டு கிளாஸுடன் கேள்விக்கான பதிலையும் நீட்டினான். ''ஒரு பெண்ணை போகிக்கறதுக்கு'' ஒரு மிடறு குடித்து விட்டு பணிக்கர் தலையை நிமிர்த்தினார்.

''ஒரு கொம்பன் யானையின் தும்பிக்கையில் ஒரு பெண்ணைச் சாய்ச்சு நிறுத்தி போகிக்கணும்''

பணிக்கர் ஒற்றை இழுப்பில் கள்ளைத் தீர்த்துவிட்டு கண்களில் படர்ந்த சிவப்பால் குட்டியப்பனை வருடினார்.

''எழுநள்ளத்துக்கு யானை கிடைக்கும். மரம் தூக்கவும் கிடைக்கும். இதுக்குன்னா கஷ்டம்'' உதட்டில் திருகிய பீடியை மென்று கொண்டு பணிக்கர்  சொன்னார்.

குட்டியப்பன் பணிக்கரின் காலடியில் உட்கார்ந்தான். ஓரிரு புகை விட்ட பிறகு பணிக்கர் சொன்னார்: '' இங்கே எங்கேயும் கெடைக்காது. இதைக் கேட்டாலே துறட்டியைப் புடிச்சுக் கொன்னுடுவாங்க. ஆனா ஒரு வழி இருக்கு. வயநாட்டிலே ஒரு தேவஸ்ஸிக்குட்டிக்கு ஒரு யானை இருக்கு. ஒருவேளை நடக்கலாம்''

''வயநாடில்ல, பூமிக்கு அந்தப் பக்கமும் போகத் தயார். எப்படியாவது சரி பண்ணிக் குடுக்கணும்'' குட்டியப்பனின் கைகள் பணிக்கரின் கால்மேல் விழுந்தன.

தேவஸ்ஸிக்குட்டி நான் சொன்னாக் கேக்கணும்'' பணிக்கர் காலிக் குப்பியைப் பார்த்து விட்டு சொன்னார்: ''முந்தி ஒரு ஆளைக் கொலை பண்றதுக்கு ஒரு யானை வேணும்னு வந்தான். அவனோட பெண்டாட்டியோட ரகசியக்காரன. இருட்டு வாக்குப் பாத்து ரெண்டு நாள் நின்னான். கெடைக்கல. இந்த வழியாப் போறப்ப எல்லாம் இங்கே வருவான். இப்ப இருக்கிற யானையை நான்தான் போய்ப் பாத்து வாங்கினேன். என்ன ஆனாலும் அங்கே போ. நான் சொன்னேன்னு சொன்னாப் போதும். வீட்டுப் பேரு வழியெல்லாம் எழுதிக்கோ''

தேவஸ்ஸிக்குட்டியின் விலாசத்தை எழுதி முடித்ததும் குட்டியப்பன் இன்னொரு முறை பணிக்கரைக் கும்பிட்டான்.

வாசலை விட்டு இறங்கியதும் குட்டியப்பன் சொன்னான்: '' கள்ளு கூட குப்பியோட காசும் குடுத்தாச்சு. சாயங்காலம் ஷாப்புக்குப் போகும்போது குப்பியக் குடுக்க வேண்டாம்''

பணிக்கர் இருமிக் கொண்டு தலையாட்டினார். ஜன்னலுக்குள்ளே ஒரு நோட்டம் தலையை வெட்டிக்கொண்டு போனது.

சாயங்காலமானதும் வீட்டு வாசலில் கொண்டுவந்து குட்டியப்பன் என்னை இறக்கிவிட்டான். நான் வீட்டுக்குள்ளே நுழையும்போது ஆகாயத்துக்குத் திரும்பும் அவசரத்துடன் வெளிச்சம் நடந்து போவதைப் பார்த்தேன். பத்மினி வராந்தாவிலேயே நின்றிருந்தாள்.

''போன காரியம் என்னாச்சு?''

கெடைக்கல. பீகாருக்குப் போகணும்'' நான் மெதுவாகத்தான் சொன்னேன்.

''பிண்டத்துக்கு நல்ல வெலையிருக்கறதால போட்ட காசை சட்டுனு எடுத்திரலாம்'' பத்மினி துளைத்து விடுவதுபோல என் முகத்தைப் பார்த்தாள்.

'' என்னோட பத்மினி, நீ தேவையில்லாததைப் பேசாதே'' என் குரல் மறுபடியும் தாழ்ந்தது.''குடமாளூர் தேவாலயத்துக்கு நேர்ச்சையாக்கும்''

''எதுக்கு நேர்ச்சை? '' பத்மினியின் குரலுக்கு பெரிய காலும் கையும் வளரத் தொடங்கின. ''பொண்ணு கெடைக்கிறதுக்கா, செஞ்ச பாவம் தீர்க்கறதுக்கா?''

''குட்டியப்பன் என்ன பண்ணிட்டான்னு நீ இப்படிச் சொல்றே?''

'', என்னை எதையாவது பேசவைக்காதீங்க"' இரண்டு கைகளாலும் நிலவிளக்கின் 9 சுடரை வீசி அணைத்து விட்டு விளக்கையின் எடுத்துக்கொண்டு உள்ளே போகிற போக்கில் சொன்னாள்: '' அவருக்குக் காப்பியும் பலகாரமும் செஞ்சு குடுக்கிற ஏலியாம்மச்சேச்சி கீழே விழுந்து முதுகை ஒடச்சுகிட்டு ரெண்டு நாளாக் கெடக்குது. அதை விழவெச்ச சாபத்தை யெல்லாம் எங்கே கொண்டுபோய்த் தீர்க்கறது. தந்தையும் தள்ளையும் 10 செத்துப்போனது நல்லதாச்சு. இல்லேன்னா அவங்களும் இதையெல்லாம் பார்க்க வேண்டியிருந்திருக்கும்''

நான் எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு குளியலறைக்குப் போனேன். குளித்துத் தலைசீவி, பவுடர் போட்டுக்கொண்டு வெளியே வந்தேன்.

''குளிச்சாலும் பவுடர் போட்டாலுமொண்ணும் கள்ளு நாத்தம் போகாது'' அடுப்படியிலிருந்து கறியின் மணத்தோடு பத்மினியின் கோபமும் வந்தது. '' பாக்கியிருக்கிறவங்க மானத்தையும்  வாங்கன்னு கெளம்பி வந்தர்றாங்க''

நான் வெறுமனே உத்திரத்தைப் பார்த்தேன்.

சாப்பிட்டுக் கொண்டிருப்பதற்கு  இடையில்தான் நாளைக் காலை  பீகாருக்குப் போக வேண்டுமென்ற விஷயத்தைத் தயங்கித் தயங்கிச் சொன்னேன். நான் சொன்ன எதையும் கேட்கவில்லை என்ற விதமாக பத்மினி சாப்பிட்டுக் கொண்டி ருந்தாள். பல முறை பலவிதமாக பீகார் விஷயத்தைச் சொன்னேன்.பத்மினி கேட்டதாகக் காட்டிக்  கொள்ள வில்லை. கடைசியில் நேர்த்திக் கடன் விஷயத்தைப் பலமுறை பலவிதமாகச் சொன்ன போதுதான் கொஞ்சமாகத் தலையாட்டுவது போலத் தெரிந்தாள்.

அதிகாலையிலேயே குட்டியப்பன் வந்து விட்டான். வண்டியின் சத்தம் கேட்டதுமே பத்மினி கேட்டாள்: ''பீகார்வரைக்கும் ஜீப்பிலேயே போறீங்கல்ல?''

நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒரு வாரத்துக்கான துணியை எடுத்து வைத்துக் கொண்டுதான் புறப்பட்டிருந்தேன். 

நேற்று அவசரமாகப் போன வெளிச்சம்  கீழே இறங்கி வருவதற்கிடையில் குட்டியப்பனின் வண்டி நகர்ந்தது. எதிரில் வந்த பத்திரிகை போடும் பாபு குட்டியப்பன் சேட்டா என்று கூப்பிட்டான். பாபூ என்று குட்டியப்பனும் கூப்பிட்டான்.சுங்கப் பாலத்தில் ஏறியபோது நான் குட்டியப்பனிடம் கேட்டேன்: '' நீ என்னாத்துக்கு அந்த ஏலியாம்மாச் சேச்சியோட முதுகை ஒடைச்சே?''

குட்டியப்பன் மீனச்சலாற்றைப் பார்த்துக் கொண்டு சொன்னான்: ''பாருங்க பிள்ளேச்சா, என்னா வெள்ளம்?''

''நான் கேட்டதுக்குப் பதிலைச் சொல்லு’’  எனக்குக் கோபம் வந்தது. ''என்னாத்துக்கு அந்த அப்பாவியோட முதுகை ஒடைச்சே?''

''என்னொட பிள்ளேச்சா, நான் ஒண்ணும் பண்ணல.எல்லா நாளும் ஏலியாம்மாச்சேச்சி படியேறி அறைக்குள்ள வரும். கதவைத் தட்டும். கட்டன் சாயா குடுக்கும். இப்படி எல்லா நாளும் ஒரே மாதிரியாவே இதெல்லாம் நடந்துட்டிருந்தா யாருக்குன்னாலும் சலிப்பா இருக்காதா? அதனாலே நான் ரெண்டாவது மாடியில ஜன்னல் பக்கமா ஒரு ஏணியை சாத்தி வெச்சுக் குடுத்துட்டு இனி மேலே காலையிலே இந்த வழியா சாயா கொண்டுவந்தாப் போதும்னு சொன்னேன். மிளகு பறிக்கறதுக்காகக் கொடிமேலே யெல்லாம் சாடி ஏறுற ஏலியம்மா சேச்சிக்கு இதெல்லாம் பெரிய பாடா? சும்மா சுகமா ஏறிவந்து சாயா குடுத்துட்டுத்தானே இருந்தது. அன்னைக்கு தோ தொபுக்கடீர்னு ஒரு விழுகை. இப்போ நல்ல எண்ணெய்ப் பாத்தியில் கெடந்து திருமலோட திருமல்தான். முதுகு சரியாகிற வரைக்கும் அங்கேயே கெடக்கச் சொல்லி யிருக்கேன். ஏலியம்மாச் சேச்சி இப்போ ஈட்டிய விடுப்பில் இருக்கில்ல. இனி அங்கேயிருந்து வந்தாலும் ஒரு வேலையும் செய்ய வேண்டாம். சும்மா சீஃப் ஷெஃப்பா நின்னாப் போதும்னு சொல்லியிருக்கேன்''

''இருந்தாலும் அது கொஞ்சம் அத்துமீறிப் போச்சு என் குட்டியப்பா'' நான் சொன்னேன்.

குட்டியப்பன் வண்டியை மிதித்து நிறுத்தினான். சீட்டில் அசைந்து உட்கார்ந்தான்.

'' பிள்ளேச்சன் கூட அப்படிச் சொல்லக் கூடாது. ஏலியாம்மச் சேச்சிக்கு விழறதுக்கான நேரம் வந்துச்சுன்னு நெனைச்சாப் போதும். அதுக்கு நான் ஒரு ஏணியை சாத்தி வெச்சேன். அவ்வளவுதான்''

நான் எதுவும் சொல்லவில்லை. குட்டியப்பன் வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். வண்டி முக்கியும் முனகியும் என்னென்னவோ சொல்லிக் கொண்டு கொஞ்ச நேரம் அப்படியே நின்றது. பிறகு எதுவும் பேசாமல் ஓடத் தொடங்கியது.

அடிவாரத்தை அடைந்ததும் ஒரு சாயா குடித்து விட்டு மேலே ஏறலாம் என்று குட்டியப்பன் சொன்னான். பக்கத்தில் தெரிந்த கடையில் சாயா குடித்தோம். ஜீப்புக்கும் ஒரு குப்பி தண்ணீர் கொடுத்தான். குளிர்ந்த காற்று கணவாய் தாண்டி வந்து கையைப் பற்றிக் கொள்ளும் என்று தோன்றியது. அப்படித் தோன்ற வேண்டிய தில்லை. ஆனாலும் தோன்றியது. ஆனால், அப்படி யாரும் வந்து கையைப் பிடிக்கவில்லை. மலைப்பாதையில் ஏறும்போது குட்டியப்பன் சொன்னான்: ''எனக்கு இங்கேருந்து உருண்டு விழுந்து சாகணும்னு ரொம்ப ஆசை. பிள்ளேச்சனுக்கு இல்லயா?''

நான் கீழே பார்த்தேன். அந்தப் பள்ளத்துக்குப் போய்ச் சேர பார்வைக்கே நீண்ட நேரம் பிடித்தது. பார்வை திரும்பி வந்ததும் சொன்னேன்: ''ஆசையெல்லாம் இருக்கு. ஆனா, பத்மினி என்னா நெனைப்பா குட்டியப்பா? நாம் பீகாருக்கில்லயா போயிருக்கோம்?''

எதிரில் வந்த ஒரு வண்டிமேல் மோதியும் மோதாமலும் ஒடித்து ஒதுக்கி விட்டுக் குட்டியப்பன் சொன்னான்: ''பிள்ளேச்சனோட பெண்டாட்டிக்கு இனி அப்படி ஒரு சங்கடம் வரவேண்டாமேன்னு நெனச்சுத்தான் தெய்வம் இப்போ வந்த பாண்டிலாரியை 11 ஒதுக்கி விட்டிருக்கு''

மைசூருக்குப் போகும் பஸ்ஸொன்று திடீரென்று முந்திக்கொண்டு போனது. வண்டிக்குள்ளே யிருந்து வெளியில் தலைநீட்டிக் கொண்டிருந்த ஒரு குழந்தையைப் பார்த்துவிட்டு குட்டியப்பன் நெஞ்சில் கை வைத்துக் கொண்டான்:'' தெய்வமே,அந்தக் குழந்தையோட தலை எந்தக் கம்பத்திலாவது மோதும். அந்தப் பொறுக்கித் தகப்பனும் தாயும் அதைக் கவனிக்கக்
கூட இல்ல’’ என்று குட்டியப்பன் உரக்கக் கத்தினான். யாரும் அதைக் கேட்கவில்லை. குழந்தையின் தலை அப்போதும் பலூன்போல வெளியே ஆடிக் கொண்டிருந்தது. வண்டி தூரத்தில் மறைந்தது. குட்டியப்பன் வண்டியை நிறுத்தி விட்டுக் கண்களை மூடி என்னவோ சொன்னான். அது பிரார்த்தனைபோலத் தோன்றவில்லை. ஆனால் பிரார்த்தனை போலவும் தோன்றியது.

கணவாயில் ஏறி இறங்கிச் சிறிது தூரம் ஓடி முடிந்தபோது பசு மாட்டைப் பிடித்துக் கொண்டு வந்த ஒருவனைப் பார்த்து குட்டியப்பன் வண்டியை நிறுத்தி யானை வைத்திருக்கும்  தேவஸ்ஸி வீட்டை விசாரித்தான். பசு எங்களைப் பார்த்து மெதுவாக்ச் சீறியது. குட்டியப்பனும் பதிலுக்கு அதேபோலச் சீறினான்.பசு சிரித்தது. '' , அது இங்கே யொண்ணுமில்ல. அம்பலவயல்லேர்ந்து திரும்பிப் போகணும்''. பசுவுடன் வந்தவன் சொன்னான்.

'' சேட்டன் பாலாயிலேர்ந்து வந்து குடியேறுனவரா?'' குட்டியப்பன் கேட்டான்.

''அப்பப்பன் பாலாயிலேர்ந்து. வல்யம்மச்சி ரான்னியிலேர்ந்து'' பசுவின் கயிற்றை அவிழ்த்துப் பிடித்துக் கொண்டு அவன் சொன்னான். அப்போ சரி என்று பசுவிடமும் பசுவுடன் வந்தவனிடமும் சொல்லிக் கொண்டு வண்டி அம்பலவயல் நோக்கி ஓடத் தொடங்கியது. அங்கே போய் தேவஸ்ஸிக் குட்டியின் வீட்டைக் கண்டுபிடிப்பதில் சிரமமில்லாமலிருந்தது. காப்பித் தோட்டத்தின் நடுவில் ஒரு பெரிய வீடு. காப்பிக் கொட்டைகள் காய்ந்து கொண்டிருந்தன.கொடியில் ஒன்றிரண்டு உள்ளாடைகளும் கைவைத்த பனியனும் இருந்தன. வாசலில்  நாயுருவிச் செடிகள் இருந்தன. வண்டிச் சத்தம் கேட்டதும் ஒரு நாய் தலை நிமிர்ந்து பார்த்து விட்டு அது  யோசித்துக் கொண்டிருந்த விஷயத்துக்குள் மறுபடியும் தலையைத் தாழ்த்திக்கொண்டது. வேறு யாரையும் காணவில்லை.குட்டியப்பன் ஒன்றிரண்டு தடவை வண்டியின் பீப்பியை அடித்தான். கொஞ்சம் கழித்ததும் ஜன்னலைத் திறந்து ஒரு கிழவி எட்டிப் பார்த்துக் கேட்டாள்'' யாரு தோமாவா?''

''ஆ...ஆமாம்'' குட்டியப்பன் சொன்னான். நான் குட்டியப்பனைப் பார்த்தேன்.

''அச்சன் என்னா சொன்னார்?'' ஜன்னல் கம்பிகளுக்கிடையில் விழித்துப் பார்த்துக் கொண்டு கிழவி கேட்டாள்.

'' அம்மச்சிக்கு ஆயுசும் ஆரோக்கியமும் உண்டாகட்டும்னு சொன்னார்''

கிழவி சிலுவை வரைந்து கொண்டு ஜன்னலைச் சாத்தினாள். எனக்குக் கோபம் வந்தது.'' குட்டியப்பா, அவங்ககிட்ட விவரம் கேட்டிருக்கக் கூடாதா?''

செருப்பில் அப்பிய நாயுருவிகளைக் காப்பிச் செடியின் தண்டால் தேய்த்து உதறிவிட்டு குட்டியப்பன் சொன்னான்: '' என்னோட பிள்ளேச்சா, தேவஸ்ஸிக் குட்டி எங்கேன்னு இந்தப் பாவத்துக் கிட்ட விசாரிச்சு காரியமில்ல. அந்த மொகத்தப் பாத்தாத் தெரியல அவங்க தோமாவை எதிர்பாத்துட்டிருக்காங்கன்னு''

நான் போய் கிழவியின் ஜன்னலில் இரண்டு தட்டுத் தட்டினேன். கொன்சம் க்ழித்து கிழவி ஜன்னலைத் திறந்தாள். கூடவே தேம்பலான குரல்.''யாரு தோமாவா?''

'' இல்ல. நாங்க கோட்டயத்திலேருந்து வர்றோம். தேவஸ்ஸிக் குட்டி இல்லையா?'' நான் கேட்டேன்.

எதுவும் சொல்லாமல் கிழவி ஜன்னலை மூடினாள். அதைப் பார்க்காததுபோல குட்டியப்பன் ஆகாயத்தைப் பார்த்தான்.நானும் ஆகாயத்தைப் பார்த்தேன். ஒருவேளை தேவஸ்ஸிக் குட்டி அந்த வழியாக இறங்கி வந்தால்...

பக்கத்து மரத்தில் ஒரு குயில் வந்து உட்கார்ந்தபோது குட்டியப்பன் சொன்னான்: '' முந்தி இங்கே குயிலொண்ணும் இருக்கல பிள்ளேச்சா, சூடு இங்கே வந்தப்போ இதுகளும்  குடியேறியிடுச்சு''

சற்றுக் கழித்து குயில் பறந்து போனது. ஒரு இலை என்னவோ சொல்வதற்காக அவசரமாகக் கீழே வந்தது. யோசனையில்முகம் பதித்துக் கிடந்த நாய், எழுந்து உடம்பை உலுக்கிக் கொண்டு சிந்தனைப் பாரத்துடன் வீட்டின் பின்பக்கமாகப்போனது. பழுத்த காப்பிப் பழங்கள் ஒன்றிரண்டைப் பறித்து வாயில் போட்டேன். பிறகு துப்பினேன். அப்போது குட்டியப்பன் ஒரு அடிமையின்கதையைச் சொன்னான்.

முன்பு பிரேசிலிலிருந்து காப்பி ஏற்றிக்கொண்டு போன கப்பலில் ஓர் அடிமை மணம் தாங்க முடியாமல் அதை அடைத்து வைத்திருந்த பெட்டியைத் திறந்து வாசனையை முகர்ந்ததற்காகக் கப்பலின் காப்டன் அவனுடைய சரீரத்தின் எல்லாத் துவாரங் களிலும் காப்பித் தூளைத் திணித்தார். அடிமை இறந்து விட்டான் என்று உறுதியானதும் அந்தத் தூள் முழுவதையும் எடுத்து காப்பி தயாரித்து மற்ற அடிமைகளுக்குக் கொடுத்தார். முதன் முதலாகக் காப்பியின் சுவையைத் தெரிந்து கொண்ட சந்தோஷம் எல்லா அடிமைகளின் முகங்களிலும் தெளிந்தது. ஆனால் அதில் பிராயம் குறைந்த ஓர் அடிமை மட்டும் அழுது கொண்டே காப்பியைக் குடித்தான். காரணம், சுவையாக உள்ளே இறங்கியது அவனுடைய
தகப்பனின் மரணத்தின் ருசியாக இருந்தது.

குட்டியப்பன் சொல்லி முடித்ததும் இதையெல்லாம் இந்த ஆசாமி எங்கேயிருந்து பொறுக்கிக் கொண்டு வருகிறான் என்று ஆச்சரியப் பட்டுக் கொண்டிருந்தேன். அப்படி ஆச்சரியத்துக்குள் நின்றிருந்த போது குட்டியப்பனுக்குப் பின்னாலிருந்து ஒரு குள்ள மனிதன் நடந்து வருவதைப் பார்த்தேன். கைகளை யாரோ நெஞ்சுக்கு மேலே இழுத்துக் கட்டிவைத்ததுபோல குறுகிப் போயிருந்தான். வந்தவன் எங்கள் இருவரையும் பார்த்தான்.

''கோட்டயத்திலேர்ந்து'' என்றான் குட்டியப்பன்.

''வா'' அவன் சொன்னான்.

காப்பித் தோட்டத்தின் வழியாக நாங்கள் நடந்துநடந்து போனோம். முன்னால் அவன். பின்னால் நாங்கள். இதுதானா தேவஸ்ஸிக் குட்டி என்று ரக்சியமாகக் குட்டியப்பனிடம் கேட்டேன். '' இருக்கலாம். இல்லாமயிருக்கலாம். ரெண்டானுலும் பிரச்சனையில்ல’’. குட்டியப்பன் சொன்னான்.

காப்பி பூத்த மணம் சில காட்டு மிருங்களைப் போலத் தாவி வருவதாக எனக்குத் தோன்றியது. அப்போதெல்லாம் அடிமையின் நினைவும் அவனுடைய தகப்பனின் நினைவும் வந்தன. அதனால் காப்பி மணத்துக்கு நேராக மூக்கைப் பொத்திக் கொண்டேன். போ மணமே என்று சாத்தானை விரட்டுவதுபோல மனதுக்குள் சொல்லிக் கொண்டிருந்தேன். நடந்துநடந்து ஒரு பனையோலையால் மறைத்த ஒரு மாடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அதற்குள்ளேயிருந்து ஒருவன் எங்களைப் பார்த்தான். ஒரு பாயை எடுத்து வந்து விரித்துப் போட்டான். நாங்கள் உட்கார்ந்தோம். குட்டியப்பன் பணிக்கர் விஷயத்தைச் சொன்னான். குள்ள மனிதன் தலையாட்டினான். வந்த காரியம் என்ன வென்று கேட்டான். வந்த காரியத்தைக் குட்டியப்பன் சொன்னான். குள்ள மனிதன் சற்று நேரம் எதுவும் பேசாமலிருந்து காற்றில் எழுதினான். அவன் எழுதுவதையெல்லாம் குட்டியப்பன் வாசிக்கவும் செய்தான். எழுதி முடித்ததும் அவன் சொன்னான்: 'இந்தத் தோட்டத்தின் தெற்கு மூலையில் நாளை இரவு பத்து மணிக்குப் பிறகு வரலாம். அப்படி நாளைக்கு முடியாதென்றால் இந்த வாரத்தில் என்றைக்கு வேண்டுமானாலும் வரலாம். இரவு பத்து மணிக்குப் பிறகு மட்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய்'. குட்டியப்பன் ஒத்துக்கொண்டான்.

திரும்பக் காப்பிச் செடிகளுக்கு இடையில் அவன் முன்னாலும் நாங்கள் பின்னாலுமாக நடந்தோம். வீட்டு வாசலை அடைந்ததும் சரி பார்க்கலாம் என்று அவன் தலையாட்டினான்.அப்போது ஜன்னகைத் திறந்து கொண்டு கிழவி வெளியே பார்ப்பதைக் கவனித்தேன். குள்ள மனிதனிடம் கேட்டேன்'' அது அம்மாவா?''

அவன் என்னைப் பார்க்கவில்லை. பதிலுக்குக்குட்டியப்பனைத்தான் பார்த்தான். வண்டியிலேறு பிள்ளேச்சா என்று கமுக்கமாகச் சொன்னான் குட்டியப்பன். வண்டிக்குப் பின்னால் காப்பியின் மணம் ஓடி வருவதுபோலத் தோன்றியதனால் குட்டியப்பனிடம் வண்டியை வேகமாக விடு என்றேன்.

வயநாட்டிலிருந்து ஒரே இருப்பாக வண்டியை ஓட்டினான். விடிவதற்குள் கோட்டயம் வந்து சேர்ந்தோம். காந்தி சிலைக்கு முன்னால் வண்டியை நிறுத்திவிட்டு குட்டியப்பன் காந்திக்கும் திருநக்கரையப்பனுக்கும்  சேர்த்தே கும்பிடு போட்டான்.

''குட்டியப்பா, இனி வீட்டுக்குப் போனா என்னால வெளியே வர முடியாது. ஒண்ணு நாம இங்கேயே பிரிஞ்சுடுவோம். இல்லே எங்கேயாவது அறையெடுத்து ஒளிஞ்சிருக்கணும்''

குட்டியப்பன் பலமாகக் கொட்டாவி விட்டுக்கொண்டு சொன்னான். ''பிள்ளேச்சா, அசோகாலே அறையெடுத்துத் தூங்கிட்டு மத்தியானமா கொமரகத்துக்குப் போலாம். அங்கேருந்து பெண் பிள்ளையை ஏத்திகிட்டு வயநாட்டுக்கு  விடுவோம்''

அதைக் கேட்டதும் நான் திடுக்கிட்டேன்.'' இந்த வண்டியிலேயே வேணுமா குட்டியப்பா?''

''அதுக்கிப்ப என்னா பிள்ளேச்சா, கூட நம்ம உஷாவும் இருப்பால்ல. பிறகென்னா?''

அசோகாவில் அறையெடுத்தோம். குட்டியப்பனின் குறட்டை அறைக்குள்ளிருந்த மின் விசிறியின் சத்தத்துடனும் வெளியே ஓடும் வாகனங்களின் சத்தங்களுடனும் போட்டி போட்டது. நான் கட்டிலில் திரும்பியும் உருண்டும் கிடந்தேன்.

நடுப்பகலுக்குப் பிறகு குமரகத்தை அடைந்தோம். உஷாவின் வீட்டுக்கு வள்ளத்தில் போக வேண்டும். வள்ளத்தில் ஏறுவதற்கு முன்பே எனக்கு நீச்சல் தெரியாது என்று குட்டியப்பனிடம் சொன்னேன். 'செத்தா நான் கௌரவமா அடக்கம் பண்ணிடறேன் பிள்ளேச்சாஎன்று குட்டியப்பன் சமாதானப்படுத்தினான். நாம் பீகாரிலேல்ல இருக்கோம். பத்மினி என்னா நெனைச்சுக்குவா' என்று சங்கடத்துடன் கேட்டபோது, 'அப்படீன்னா வள்ளம் கவிழாம இருக்க மண்டிபோட்டுப் பிரார்த்தனை செய்றேன்' என்று குட்டியப்பன் சொன்னதும் ஆடித் திரும்பிய வள்ளம் நேராக நகர்ந்தது. 'நம்ம பிரார்த்தனைய தெய்வம் கேட்டிருச்சு பாத்தீங்களா?' என்று சொல்லி இரண்டு கைகளாலும் நீரை அள்ளி வீசினான்.துடுப்புக்காரன் துடுப்பை ஆழமாகப்போட்டுத் துழாவினான்.

உஷா வீட்டுக்குப் போகும் சிறயில் 15 நடப்பதற்கிடையில் சட்டென்று வட்டமாகத் திருப்பி நிறுத்தி விட்டு குட்டியப்பன் விளைநிலத்தில் சுட்டிக்காட்டினான்.  புற்களுக்கிடையில் எதுவும் தெரியாத ஒருவன்.நான் கண்களால் யாரென்று கேட்டேன். குட்டியப்பன் காதுக்குள் எலி சுரண்டுவதுபோல குட்டியப்பன் 'மழைக் கொச்சன்' என்றான் நான் இன்னொரு முறை பார்ப்பதற்காகக் கண்களை அனுப்பியபோது ஆளைக் காண வில்லை. 'கண்டத்திலே 16 கண்கட்டு வித்தைக்காரனாக்கும்' என்றான் குட்டியப்பன். முந்தி இப்படி ஒளிஞ்சிருந்துதான் வியட்நாம்காரங்க  அமெரிக்காக்காரர்களை ஊம்பவிட்டாங்க. நான் குட்டியப்பனின் முகத்திலிருந்து துள்ளி வரும் சரித்திரத்தைப் பார்த்துகொண்டு நிற்கையில் முன்னாலிருந்த புதர்க் காடுகளிலிருந்து நிறைய கொக்குகள் படபடவென்று ஆகாயத் துக்குப் பறந்து எழுந்தன. குட்டியப்பன் அவர்களைப் பார்த்துக் கை வீசினான். நான் கேட்டேன்: '' வியட்நாம்காரங்களா?''

''இங்கேயெங்கே குட்டியப்பா வியட்நாம்காரங்க. இங்கே முழுசும் சீனா, ரஷ்யா பாய் பாய் ஆயிருந்ததே?''

போகும் வழியில் ஒரு வீட்டின் முன்னால் கப்பைக் கிழங்கு உலரப்போட வைத்திருந்த சிக்குப் பாயின் தலைமாட்டில் கிழிந்துபோன ஒரு சிவப்புக் கொடி குத்தி வைக்கப்பட்டிருந்தது. கொடிக்குப் பயப்படாமல் காக்கைகள் அதைச் சுற்றி நடந்து கொண்டிருந்தன.

''உஷா வீட்டுக்காருக்கும் இல்லே'' எதிரில் வந்த ஒரு கிழவன் கேட்டான்.

தீர்க்க தரிசனம் கொண்ட தெய்வப் பிறவிகளாச்சே நீங்கள் என்று பதில் சொன்னான் குட்டியப்பன். கிழவனுக்கு எதுவும் புரிய வில்லை யென்றாலும் அமுக்கமாகச் சிரித்தான். நடப்பதற்கு இடையில் நான் ஓரிரு முறை அவனைத் திரும்பிப் பார்த்தேன். அப்போதெல்லாம் அவனும் என்னைத் திரும்பிப் பார்த்துக் கொண்டேயிருந்தான்.

சிறயில் இரண்டு மூன்று தென்னை மரங்களுக்கு இப்பாலிருந்தே 'உஷே' என்று கூப்பிட்டுக் கொண்டே குட்டியப்பன் நடந்தான். உஷாவின் வீட்டை வீடு என்று சொல்ல முடியாது. ஆஸ்பெஸ் டாசும் ஓலையும் வேய்ந்த மேற்கூரை, சுற்றிலும் கள்ளிப் பலகைகள் அடித்த ஒரு பெரிய மறைப்பு. அதற்குப் பின்னால்தான் சிற போகிறது.ஒற்றை அரச மரமும் கொஞ்சம் சட்டிகளும் சமையலறை நீர் விழுந்து ஊறிய மண்ணில் உட்கார்ந்திருந்தன. ஒரு பூனை ஆட்டுக் கல் மேல் உட்கார்ந்து கால் நக்கித் துடைத்துக்கொண்டிருக்கிறது.  ரேடியோ விலிருந்து பாட்டும் இடையில் வெடிச்சத்தமும் கேட்டன. குட்டியப்பன் இன்னொரு தடவை உஷே என்று நீட்டி அழைத்தான். சட்டென்று ரேடியோ வின் பேச்சு நின்றது. சமையலறைப் பக்கமிருந்து ஒரு பெண் துள்ளி இறங்கி வருவதை நான் பார்த்தேன். குட்டியப்பனைக் கண்டதும் அந்தக் கறுத்த முகம் மலர்வதைப் பார்த்தேன். 'என் தெய்வமே, இது யாரு' என்று சொல்லி வெட்கத்தில் முகம் சிவந்தாள். ஆச்சரியப்பட்டுக்கொண்டு அப்படியே நின்ற பிறகு இங்கே நிற்காமல் முன் பக்கமாக வாருங்கள் என்று சொல்லி எங்களையும் கூட்டிக் கொண்டு நடப்பதற்கிடையில் ஆட்டுக் கல்லிலிருந்து தாவிய பூனையை  'நாசமாப் போற பூனை' என்று சொல்லிக் கொண்டு எத்தி விட்டாள்.

சின்னதாகச் சிணுங்குகிற பெஞ்சில் நாங்கள் உட்கார்ந்தோம்.'சாரே, என்னா வேணும், காப்பி வேணுமா, இல்ல, தோ, ஒரு ஓட்டம் ஓடினா நல்ல அந்தி கெடைக்கும் என்னா வேணும்னு சொல்லு சாரே' என்று சொல்லிக்கொண்டு உஷா நின்றாள். 'ஒண்ணும் வேண்டாம், உஷே, நீ கொஞ்சம் அடங்கி இரு' என்று சொல்லி விட்டு குட்டியப்பன் உஷாவை ஒருமுறை பார்த்தான். அந்த நோட்டம் உஷாவை மறுபடியும் சிவக்கச் செய்தது.

''தாமோதரன் எங்கே?'' குட்டியப்பன் கேட்டான்.

சிவப்பிலிருந்து வெளியே வராமல் உஷா அப்படியே நின்று கொண்டு சொன்னாள் ''தோ, இப்பத்தான் அந்தப் பக்கமாப் போச்சு. ஒண்ணு ஷாப்பில இருக்கும்.இல்லேபார்ட்டி ஆபீசில இருக்கும். வேறெ எங்கேயும் போகாது. பாக்கணுமா?''

'சும்மா கேட்டேன்' என்று சொல்லிவிட்டு குட்டியப்பன் காரியத்துக்கு வந்தான். ''ரெண்டு நாளைக்கு வயநாடுவரைக்கும்
கொண்டுபோறதுக்கு நல்ல குட்டிக எதுவும் உன் கையில் இருக்கா?''

உஷாவின் முகத்திலிருந்த பிரகாசம் அணைந்தது.''என்னோட சாரே, துணிக்கடையில வேலை பாக்குற ஒண்ணு ரெண்டு இருக்கு. ஆனா, சாயந்திரம் வீட்டுக்குப் போகணும். இல்லேன்னா பிரச்சனை. இந்த எடத்த விட்டு எங்கேயும் வராது''

ஒரு காக்கை வாசலில் வந்து கத்திவிட்டுப் போனது. நான் குட்டியப்பனையும் உஷாவையும் மாறிமாறிப் பார்த்தேன். இரண்டு பேரும் என்னவோ யோசிக்கிறார்கள். கடைசியில் உஷா யோசனையை முடித்துக் கொண்டாள் '' நான் வந்தாப் போதுமா?''

குட்டியப்பன் பெஞ்சில் அசைந்து உட்கார்ந்து விட்டுச் சொன்னான்: ’’என்னோட உஷே, இது நல்ல சின்னப் பிள்ளைங்க தேவைப் படற ஏற்பாடாக்கும்''

''சாரோட ஏற்பாடுதானே, ஹோ, எனக்குத் தெரிஞ்சதுதானே?'' உஷா என் பக்கம் திரும்பினாள்: '' முந்தி ஒரு தடவை இந்தக் குட்டி யப்பன் சார் என்னைக் கூட்டிட்டுப் போனாரு. நான் அன்ணைக்கு பீல்டுக்கு வந்த சமயம். அப்புறம் என்னா பண்ணினாருங்கிறீங்க! என்னோட ஒடம்பு முழுசும் எண்ணெ தேச்சுவுட்டு ஒரு டேப் ரிக்கார்டர்ல பாட்டைப் போட்டார். அப்புறம் எங்கிட்ட சொல்றாரு, டான்ஸ் ஆடறதாம். ஒட்டுத் துணியில்லாமயாம். ஹோ, இப்பவும் எனக்கு அதை நெனைச்சுப் பாக்க முடியல. பத்து பேர் கூடப் படுத்துடலாம். ஆனா அந்த வேல? என்னோட அம்மோ, கொஞ்சம் அத்து மீறுனதாப் போச்சு. அப்புறம் போற நேரத்தில நெத்தியில ஒரு முத்தமும்''

இதைக் கேட்டதும் குட்டியப்பன் உரக்கச் சிரித்தான். அந்தச் சிரிப்பு படர்ந்து கிடக்கும் வயலுக்கு மேலாகப் பறந்து பக்கத்திலிருக்கும் ஒரு தென்னையின் உச்சிக்குப் போய் ஒரு காவளங்காளியுடன் 18 உட்கார்ந்து கொண்டது.

''இனி இப்ப என்னா செய்ய?'' உஷா கொண்டு வந்த காப்பியை ஊதிக் குடித்துக்கொண்டு குட்டியப்பன் கேட்டான்.

''தாசப்பாப்பியைப் பாருங்க. கொஞ்ச உருப்படிங்க கையில் வந்திருக்குன்னு கேள்விப்பட்டேன்'' உஷா சொன்னாள்.

குட்டியப்பன் காப்பியை ஊதிக்கொண்டு உட்கார்ந்திருந்தான். புறப்படுகிற நேரத்தில் உஷா ஒரு பிளாஸ்டிக் கவரில் மீன்கறியைக் கொண்டு வந்து கொடுத்தாள். '' வாளை மீன் தலை, போற வழியில தொட்டுக்கலாம்'' நான் உஷாவைப் பார்த்தேன். குட்டியப்பன் தந்த முத்தம் அந்த நெற்றியில் மறையாமல் இருப்பதாகத் தோன்றியது.

உஷா கொஞ்ச தூரம் கூடவே வந்தாள். விவசாயம் செய்யாமல் தரிசாகக் கிடந்த கண்டத்தைப் பார்த்து விட்டு உஷாவிடம் கேட்டேன்: ''இங்கே யாரும் விவசாயம் பண்றதில்லையா?''

உஷா பதிலை குட்டியப்பனிடம் சொன்னாள்: '' இந்த சார் பத்திரிகையொண்ணும் படிக்கறதில்லயா?''

உஷாவின் வாளை மீன் கறியின் உறைப்பு கோட்டயத்துக்கு வந்து சேர்ந்தும் நாக்கில் கொதித்துக் கொண்டிருந்தது. ரெயில்வே பாலத்தின்மேல் வண்டியை நிறுத்து விட்டு குட்டியப்பன் என்னை அங்கேயே உட்கார்ந்திருந்தால் போதும் என்று சொல்லி குறுக்கு வழியாக எங்கேயோ போனான். ஒன்றிரண்டு ரயில்கள் தெற்கும் வடக்குமாகப் போவதைப்
பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். இடையில் ஒருவன் வந்து 'இங்கே உட்கார்ந்திருக்கிறது எதுக்காக?' என்று கேட்ட போது 'சும்மா உட்கார்ந்திருக்கேன்' என்று சொன்னேன். 'மருந்து 19 க்குன்னு வந்திருந்தா போலீசு வர்றதுக்குள்ள வடியாயிடு' 20 என்றான். எனக்கு எதுவும் புரியவில்லை. புரியாத விஷயங்களை யோசித்துக் கொண்டிருப்பதற்கு இடையில் குட்டியப்பன் அவசரமாக வந்தான். சட்டென்று வண்டியை ஸ்டார்ட் பண்ணினான். இந்த வண்டிக்கு இவ்வளவு ஸ்பீடா என்று யோசித்தேன். போகிற வழியில் குட்டியப்பன் சொன்னான். 'தாசப்பாப்பியோட வீட்டுக்குப் பக்கத்தில் கிறுக்கனுங்க 21 பூந்துட்டாங்க. ரெண்டு கிலோ ஜேம்ஸைப் 22 புடிச்சிட்டாங்க'. சொல்லி முடிப்பதற்குள் வண்டி திருநக்கரை மைதானத்துக்கு வந்து சேர்ந்திருந்தது. மீன் சாப்பிட்டிருப்பதால் கோவிலுக்குள் வர முடியாது என்று குட்டியப்பனிடம் சொன்னேன். 'அதுக்கு இப்ப யாரு கோவிலுக்குள்ள போறாங்க? அந்த தாசப்பாப்பி நடையில எங்காவது இருக்கான்னு பாக்கறதுக்குத்தானே பிள்ளேச்சா' என்று சொல்லி என் கையைப் பிடித்து நடந்தான். கோவில் நடையில் நுழையும்போது குகையிலிருந்து வருவது போன்ற சப்தம்.

காட்டிலிருக்கும் மூலிகையை
நாட்டுக்குக்கொண்டு வந்து சிலபேர்
காட்டும் கோமாளி வித்தையை
பார்த்துட்டுப் போங்க நீங்க
கேட்டுட்டுப் போங்க நீங்க...

நடையில் இருட்டிலிருந்து சாட்டர்ஜி முகர்ஜி பாடிக் கொண்டி ருந்தார். சாட்டர்ஜி முகர்ஜி வைக்கத்துக்காரர். கோவில் நடையும் திருநக்கரையப்பனுமாக இங்கேதான் வருடக் கணக்காக வாழ்க்கை. ஒரே சொத்தாக இருந்த ஹிந்தி அகராதியை திருநக்கரையப்பனுக்குக் கொடுத்து விட்டார். நெருக்கடிநிலைக் காலத்தில் ஆனந்த் ஹோட்டலுக்கு முன்னாலிருந்த பூவரச மரத்தில் ஏறி உட்கார்ந்து கீழே நடந்துபோன போலீஸ்காரனிடம் ’நான் தான் வெள்ளத்தூவல் ஸ்டீபன்’ என்று கூப்பாடு போட்டதன் இருமலும் வலியும் இன்றும் சாட்டர்ஜியின் முதுகெலும்பு வழியாக எட்டிப் பார்ப்பதுண்டு.காலை முதல் கைலாசநாதனை நிணைத்துக் கொண்டு புகையிழுத்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். இழுத்துக் கொண்டிருந்த பீடியைக் கொடுத்து குட்டியப்பனை வரவேற்றார்.

''அலக் சம்போ மஹாதேவ்'' என்று பக்திப் பரவசத்துடம் கூவி விட்டு குட்டியப்பன் புகையை உறிஞ்சி இழுத்தான். பிறகு மெதுவாக வெளியே விட்டான். அது இருட்டின் தோளைப் பிடித்து ஏறிப் போனது. சாட்டர்ஜி பீடியின் ஒட்டியாணத்தை அவிழ்த்து அடுத்த புகைக்காக உள்ளங்கையில் போட்டுத் தேய்க்கத் தொடங்கினார்.

தீபாராதனை முடிந்து நெற்றி நிறைய விபூதி பூசி இரண்டு காதுகளிலும் நிறையப் பூக்களையும் செருகிக்கொண்டுதான் தாசப்பாப்பி வந்தான். குட்டியப்பனைப் பார்த்ததும் கட்டிக் கொண்டான். 'தோ, இப்பக் கூட திருநக்கரையப்பன் கிட்டே
குட்டியப்பன் சார் சுகமா இருக்கணும்னு பிரார்த்தனை பண்ணிட்டு வர்றேன்' என்று சொல்லவும் அந்த முற்றிய பொய் முகத்தில் விசிறிய நாற்றத்தில் குட்டியப்பன் கொஞ்சம் பின்னுக்குச் சாய்ந்தான். கோவில் காளை எங்கள் பக்கமாக வந்து பார்த்தது. குட்டியப்பன் காளையின் நெற்றியை வருடிக் கொடுத்தான். நான் வந்ததனால் உங்கள் பேச்சை நிறுத்த  வேண்டாம் என்ற பாவத்தில் அங்கே நிற்காமல் போனது. காளை போனதும் 'புது கட்சிங்க ஏதாவது கையிலேருக்கா?' என்று குட்டியப்பன் தாசப் பாப்பியிடம் கேட்டான்.அதைக் கேட்டதும் தாசப்பாப்பி திரும்பி திருநக்கரையப்பனைப் பார்த்து, 'சத்தியமா இல்ல சாரே, ஒண்ணுகூட இல்ல' என்று ஆணையிட்டான். 'சார் முந்தி கூட்டிட்டுப் போன பிந்து இருக்காளே அவ போன வாரம் யாரோட கொழந்தையையோ பாத்துக்கறதுக்குன்னு சொல்லி பெர்ஷியாவுக்குப் போயிட்டா. அவ இருந்தா அவளக் குடுத்திருப்பேன். என்னாருந்தாலும் அவளுக்கு சாரை பயங்கர இஷ்டமாருந்தது. 'மொதல்ல சார் கையிலதான் அவளக் குடுத்தேன்' என்று என்னிடம்தான் தாசப்பாப்பி சொன்னான். 'இந்த சாரானா மூக்கில பஞ்சை வெச்சு, சாம்பிராணியும் வெளக்கும் கொளுத்தி வெச்சு தரையில விரிச்ச பாயில வெள்ளைத் துணியப் போத்திகிட்டு ஒரே கிடப்பு. அப்புறம் அவகிட்ட சொல்றாரு இங்கே செத்துக் கிடக்கறது உன்னோட அப்பன்னு நெனைச்சுகிட்டு அழுன்னு.
ஹோ, அன்னைக்கு அவ சொன்னா, என்னோட தாசப்பாப்பீ, ரொம்ப நேரம் பேசாம உக்காந்திருந்தேன். அப்புறம் அவரப் பாத்தப்போ  ஒரு அப்பன்கிட்ட தோணற இஷ்டமெல்லாம் தோணிச்சு. நான் அழத் தொடங்கிட்டேன். கடைசியில எனக்கு அழுகையை எப்படி நிறுத்தரதுன்னு தெரியாமப் போச்சு. அப்புறம் அவரு எந்திரிச்சு வந்து கண்னைத் தொடச்சு விட்டு நெறைய காசும் குடுத்து சூடான காப்பியை ஆத்திக் குடுத்து குடிக்க வெச்சுட்டுத்தான் அனுப்பினாரு. இதெயெல்லாம் சொல்றப்ப அவ கண்ணுல தண்ணி வரும் சாரே'. இதைக் கேட்டதும் குட்டப்பன் உரக்கச் சிரித்தான்.வழியில் போன ஒன்றிரண்டு ஆட்டொ ரிக்ஷாக்கள் சத்தம் கேட்டுத் திரும்பிக் கூடப் பார்த்தன.

''இனி  என்னா செய்ய?''  குட்டியப்பன் கேட்டான்.

தாசப்பாப்பி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு சொன்னான்: '' ஆர்ப்பூக்கரைக்கார ஆளு ஒருத்தன் இப்ப குற்றிப்புறத்தில இருக்கான்.அங்கே போய் ஒன்னுரெண்டு மாசந்தான் ஆயிருக்கும். அவனோட மக ஒருத்தி இருக்கா. பதினாறே வயசு. சில சமயம் கெடைக்கலாம்''

', அதெல்லாம் பெரிய கஷ்டமில்லியா தாசப்பாப்பி' என்று குட்டியப்பன் சந்தேகப்பட்டபோது 'ஹே, பெரிய கஷ்ட மொண்ணுமில்ல' என்று தாசப்பாப்பி ஆறுதல் சொன்னான். 'இந்த தகப்பங்காரன்தான் பொண்ண கர்ப்பிணி ஆக்கினான். அன்னைக்கு அதைக் கலைச்சது நம்ம டாக்டருதான். ஊர்க்காரங்க இதி மோப்பம் புடிச்சு வர்றதுக்குள்ள ஆசாமி இடத்தை வித்துட்டுப் போனதாக்கும். இடத்தோட விவகாரத்தையுங்கூட நாந்தான் முடிச்சுக் குடுத்தேன்.குட்டியை அத்தியாவசியம் ஓட விடறதா அந்த ஆளுக்குப் பிளான் இருக்குன்னு எனக்குத் தோணியிருக்கு. ஒண்ணு தட்டிப்பாரு. நான் சொல்லி வந்ததாச் சொன்னாப் போதும்''

எனக்கு லேசாகப் பயம் தோன்றியது. நான் குட்டியப்பனைத் தள்ளி நிறுத்தி இது வேணுமா என்று கேட்டேன். குட்டியப்பன் எதுவும் பேசாமல் என்னைப் பார்த்து விட்டு சாட்டர்ஜி முகர்ஜியிடம் போய் ஒரு புகைகூட இழுத்து விட்டு 'ஜோ வாதா கியா' என்று இரண்டு வரி பாடினான். பக்கத்தில் உட்கார்ந்திருந்த ஆள் சொல்வதும் கேட்டது: ''என்னோட ஆசானே, இது வழியா லதாவோட வரவொண்ணு இருக்கு.ஓ, என்ன வரவாக்கும் அது?''

ஆனந்த மந்திரத்தின் முன்னால் வைத்துத்தான் குட்டியப்பனின் நாவிலிருந்து லதாவின் வருகை வந்தது: 'யே மானாஹமே ஜான்சே ஜானே படேகா'

இரண்டு பக்கமும் மலையாள எழுத்து '' வை  யாரோ எழுதக் கற்றுக் கொடுத்தது போலிருக்கும் குற்றிப்புறம் பாலத்தின் மேல் போகும்போது 'கீழே துணியில்லாமக் கெடக்கிறது யாருன்னு பாருங்க' என்று குட்டியப்பன் சொன்னான். மணலால் தீட்டப்பட்ட ஒரு பெரிய சரீரம் அங்கே நீண்டு நிமிர்ந்து கிடக்கிறது. ஓ, நம்ம மீனச்சிலாறு இதை விடவும் பரவாயில்லை' என்று நான் சொன்னது பாலத்துக்கு அடியில் இறங்கிப் போயிற்று. 'மெதுவாப் பேசுங்க பிள்ளேச்சா, பொணத்தைக் குத்தக் கூடாது' என்று குட்டியப்பன் திட்டினான். '', கேட்டா இப்பக் கிழிச்சுடுவாங்க''. எனக்கும் கோபம் வந்தது. ''பாம்பையும் சேட்டனையும் பாத்தா முதல்ல சேட்டனை அடிச்சுக் கொல்லுன்னுல்லே வடக்கே இருக்கிறவங்க சொல்றது. இப்ப மலைப்பாம்பு செத்துக் கெடக்கிற மாதிரியான இந்தக் கெடப்பு. யாரு கொன்னது நாமளா?'' குட்டியப்பன் வண்டியை நிறுத்திக் கீழே பார்த்தான். மணலின் மூச்சு மேல்நோக்கி வந்தது.

தாசப்பாப்பி கொடுத்த முகவரியிலிருக்கும் ஆளைக் கண்டு பிடிக்க மிகவும் சிரமப்பட்டோம். கடைசியில் ஒன்றிரண்டு பறம்புகள் ஏறி இறங்கித்தான் தங்கப்பன் நாயரின் வீட்டைக் கண்டு பிடிக்க முடிந்தது. நாங்கள் போன போது தங்கப்பன் நாயர் புட்டுக் குடத்தில் வெந்நீர் நிரப்பி ஆவி பிடித்துக்கொண்டிருந்தார். சத்தங்கேட்டுத் தலைவழியாக மூடியிருந்த துண்டை எடுத்துப் பார்த்தார். தங்கப்பன் நாயர் முகத்தில் இப்போதுதான் கொப்புளித்த வைசூரி போல ஆவியின் குமிழிகள் இருந்தன. ''யாரு?'' தங்கப்பன் நாயரின் குரலில் சின்ன நடுக்கமிருந்தது. '' , இங்கே பக்கத்தி லேருந்துதான்'' குட்டியப்பன் சொன்னான். முகத்திலிருந்த கொப்புளங் களைத் துடைத்து விட்டு தங்கப்பன் நாயர் வெளியே வந்தார். தன்னந்தனியாகப் பேசுகிற ஆளைப் போல புட்டுக் குடம் அப்போதும் வெள்ளை நீராவியால் ஓசையில்லாமல் பேசிக்
கொண்டிருந்தது.

கோட்டயத்திலிருந்து தாசப்பாப்பி சொல்லி வருவதாகக் குட்டி யப்பன் தங்கப்பன் நாயரிடம் சொன்னான். காரியம் என்ன என்று தெரிந்து கொள்ளும் துளைப்பு தங்கப்பன் நாயரின் கண்களில் இருந்தது. 'இங்கேயே நிக்கணுமா, வெளியில போலாமே?' என்ற குட்டியப்பன் கேட்டதும் சடாரென்று சட்டை போட்டுட்டு வந்து டறேன் என்று சொல்லி தங்கப்பன் நாயர் கால்களை அகட்டி வைத்து நடந்து வீட்டுக்குள்ளே போனார்.  அவருடைய மல்மல் வேட்டிக்கு அடியில் வீங்கிய விரைகள் தொடைகளுக்கிடையில் உரசிக் கொள்வதைப் பார்த்தேன்.  ஒன்றிரண்டு முறை கண்ணை இடுக்கி வீட்டுக்குள்ளே பார்த்தேன்.ஆனால் யாரையும் காணவில்லை. தங்கப்பன் நாயர் சட்டையை மாட்டிக்கொண்டு வேகமாக வந்தார்.

’’இங்கேல்லாம் மனைக்கு என்ன விலை?'' குட்டியப்பன்  கேட்டான். ''பன்னெண்டு'' என்றார் தங்கப்பன் நாயர். ''வீட்டுக் கூரையெல்லாம் ஒழுகுது. சமையல் கட்டோட செவுரு இப்போ விழுந்துடப்போறேன்னு சொல்லிட்டிருக்கு.எல்லாத்தையும் சரி பண்ணணும்னா ஒண்ணரை யாவது வேணும். கையிலேன்னா காசுமில்ல''

''காசை நெனச்சுப் பயப்பட வேண்டாம். ஒரு ரெண்டு ரூபா நான் தர்றேன்.மேலே வேணும்னாலும் சொன்னாப் போதும்''குட்டியப்பன் தங்கப்பன் நாயரின் தோளில் கைபோட்டுக் கொண்டுதான் இதச் சொன்னான். நான் குட்டியப்பனைப் பார்த்தபோது' அதானே பிள்ளேச்சா ,அதோட சரி' என்று என்னிடம் கேட்டான். நான் தலையாட்டினேன். வேறு என்ன செய்ய?

தங்கப்பன் நாயரை ஜீப்பின் பின்னால் ஏற்றினான். 'சும்மா ஒரு வட்டமடிச்சுட்டு வரலாம்' என்று வண்டியைக் கிளப்பினான். கொஞ்ச தூரம் தாண்டியதும் தங்கப்பன் நாயரிடம் குட்டியப்பன் சொன்னான்: '' நானே காச்சின சின்னது சீட்டுக்கு அடியிலே இருக்கு. எடுத்து அடிச்சுக்கோ'' தங்கப்பன் நாயர் ஒவ்வொரு மிடறு இறக்கும்போதும் பாம்பு சீறுவதுபோல சத்தமெழுப்பினார்.

''எப்ப்டியிருக்கு?'' குட்டியப்பன் கேட்டான்.

'', அமிர்தமில்லயா, அமிர்தம்'' தங்கப்பன் நாயர் சொன்னார்.

ஒரு எரி மணம் வண்டிக்குள்ளே நிரம்பியது. இடையிடையே தங்கப்பன் நாயரின் சீழ்க்கையும். ஆளில்லாத இடத்தைப் பார்த்து குட்டியப்பன் வண்டியை நிறுத்தினான். தங்கப்பன் நாயர் வெளியே இறங்கத் தொடங்கியபோது 'அங்கேயே உக்காருங்க சேட்டா' என்று சொல்லிக்கொண்டு வண்டிக்குப் பின்னால் வந்து நின்றான். குட்டியப்பனும் தங்கப்பன் நாய்ரும் சிரிது நேரம் எதுவும் பேசவில்லை. இப்படிப் பேசாமல் நின்றுநின்றே இவர்களுடைய வாழ்க்கை இங்கே தீர்ந்து போய் விடுமோ என்று கூட நான் பயந்தேன். ஆனால் குட்டியப்பனே மௌனத்தை உடைத்தெறிந்தான். ''வந்த காரியம் புரிஞ்சிருக்குமில்லயா? குட்டியப்பன் கேட்டான். தங்கப்பன் நாயர் தலையாட்டினார்.


''ஆனா சின்னப் பிரச்சனையிருக்கு. அதையிப்ப எப்படிச் சொல்ற துன்னு எனக்குத் தெரியல. தங்கப்பன் நாயர் சேட்டா, எனக்கு உங்க மக வேணும். ஒரு யானையோட தும்பிக்கையில சாய்ச்சு நிறுத்தி நான் போகிக்கறதுக்காக'' ஒரு தகப்பன் இதை எப்படிக் கேட்டுக் கொண்டு நிற்கிறான் என்ற பதற்றம் ஒரு நொடி நேரத்துக்கு என் உடலைப் புகையச் செய்தது. ஆனால் தங்கப்பன் நாயர் இடையிடையே இரை பிடிப்பதுபோல நாக்கை நீட்டி வாற்றுச் சாராயத்தின் வீரியத்தை வெளியிலிருந்த காற்றுடன் இணைசேர்த்துக் கொண்டிருந்தார். தங்கப்பன் நாயர் இன்னொரு தடவை குடித்து விட்டுக் கேட்டார்: ''சாரே, அதெல்லாம் பெரிய ஆபத்தானவேலயில்லையா?''


''என்னா ஆபத்து. என்னொட சேட்டா. படுக்கவெக்கிறதுக்குப் பதிலா நிக்கவெக்கிறோம். செவுத்துக்குப் பதிலா யானையோட தும்பிக்கை. அவ்வளவுதான்''

''இருந்தாலும்'' தங்கப்பன் நாயருக்குள்ளேயிருந்த தகப்பன் சந்தேகப்பட்டான்.

''நாம் கைக்கொழந்தைகளத் தூக்கிட்டு யானையோட காலுக்கு அடியில நுழைஞ்சு போறதில்லையா?பறையெடுக்கிறப்போ பிள்ளைங்களை தும்பிக்கையால தொட விடறதில்லயா. அவ்வளவுதான். நமக்குத் தெரிஞ்ச யானையாக்கும்.ஒரு எறும்பு சாஞ்சு நிக்கற மாதித்தான் அதுக்குத் தோணும்'' தங்கப்பன் நாய்ர் தலையாட்டிக்கொண்டிருந்தபோது குட்டியப்பன் ஒரு கட்டு நோட்டை எடுத்து அவர் கையில் திணித்தான்.

திரும்பிப் போகிற வழியில் குட்டியப்பன்' கொழந்தைய ஒரு தடவ பாக்கணுமே தங்கப்பன் நாயர் சேட்டா' என்றான். ', அதுக்கென்ன, இப்ப வீட்டுக்குத்தானே போறோம்' என்று அவரும் சொன்னார். ஒரு காரியம் பண்ணுங்க. நாங்க வண்டியிலேயே இருக்கோம். சேட்டன் கொழந்தையக் கூட்டிட்டு வா. நாம அவளுக்குக் கொஞ்சம் துணியெல்லாம் வாங்க வெளியிலே போலாம்' என்று சொன்னான் குட்டியப்பன். தங்கப்பன் நாயர் வண்டியிலிருந்து இறங்கினார். அவர் போனதும் ' கொஞ்சம் கை மீறின வெளையாட்டில்லயா?' என்று குட்டியப்பனிடம் கேட்டேன்.

குட்டியப்பன் கண்களை  மூடி  என்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அது பிரார்த்தனை போலத் தோன்றவில்லை. ஆனால் பிரார்த்தனை போலவும் தோன்றியது.

''சாரே, இதோ மக''  தங்கப்பன் நாயரின் குரல் கேட்டுத்தான் திரும்பிப் பார்த்தான். சின்னப் பெண் குழந்தை. எனக்கு சட்டென்று என்னுடைய மகளுக்கும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதே சாயல்தான் இருந்ததோ என்று தோன்றியது.

''வண்டீல ஏறு'' குட்டியப்பன் சொன்னான்.

வண்டி ஓடத் தொடங்கிய பிறகு குட்டியப்பன் திரும்பி உட்கார்ந்து கேட்டான்: ''கொழந்தையோட பேரென்னா?''

அவள் எதுவும் சொல்லவில்லை.

''என் பேரு குட்டியப்பன். இது பிள்ளேச்சன். முந்தி கல்ஃபிலே இருந்தார். இப்போ அங்கேருந்து வந்து சும்மா திரியறார். எனக்கு வேலை எதுவுமில்ல''வண்டி ஒரு பள்ளத்தில் இறங்கி ஆடிப் பாய்ந்தது.

''  இந்தப் பிள்ளேச்சனுக்கு  உன்னை மாதிரியே ஒரு மக இருக்கா. பாத்தா இப்படித்தான் இருப்பா.நல்ல வெளுப்பு, பெரிய கண்ணுங்க''

என் குரல் வளையில் ஒரு நொடி பாரமேறியதுபோலத் தோன்றியது.

''மோளோட பேரு சொல்லு மோளே'' குட்டியப்பன் மறுபடியும் கேட்டான்.

''அவள வீட்டில கூப்புடறது....'' தங்கப்பன் நாயர் சொல்லத் தொடங்கியதை அப்போதே தடுத்து விட்டுக் குட்டியப்பன் சொன்னான்: '' இவளுக்குப் பேரு சொல்லத் தயக்கம்னா நான் லீலான்னு கூப்பிடப் போறேன்''

''அது நல்லாருக்கு'' என்று தங்கப்பன் நாயர் ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தார்.

துணிக் கடையிலும் அவள் எதுவும் பேசாமல் நின்றிருந்தாள். சேல்ஸ்மேனின்  இரு கைகளிலிருந்து பல வண்ணத் துணிகள் மேஜை மீது கொஞ்ச தூரம் மட்டுமே பற்க்கும் பறவைகளைப் போல வந்து விழுந்து கொண்டிருந்தன. அவள் எதையும் பார்க்கவில்லை என்பது எனக்குப் புரிந்தது. குட்டியப்பன் தான் எல்லாவற்றையும் தேர்ந்தெடுத்தான். ஒரு சேல்ஸ் கேர்ளை அழைத்து நல்ல பூக்கள் போட்ட நிறமுள்ள உள்ளாடைகளும் பிரேசியரும் நான்கைந்து எடுத்து வைக்கும்படி ரகசியமாகச் சொன்னான். சேல்ஸ் கேர்ள் சின்ன வெட்கத்துடன் 'சைஸ் தெரியணும்' என்று சொன்னபோது ', உன் சைஸ்லே எடுத்தாப் போதும்' என்றான் குட்டியப்பன்.

துணியெல்லாம் எடுத்து முடிந்ததும் குட்டியப்பன் லீலாவிடம் 'என்னவாவது சாப்பிட வேண்டாமா?' என்று கேட்டான்.

''பின்னே, வேண்டாமா. வயிறு தகிக்குது'' தங்கப்பன் நாயர் பதில் சொன்னார்.

லீலா ஒன்றும் சாப்பிடவில்லை. பாத்திரத்தில் விரல்களைச் சும்மா வைத்திருந்தாள். ஆறிக் குளிர்ந்து போன அந்த விரல்கள் பட்சணத்தின் சூட்டையும் சட்டென்று குளிர வைத்தன.

''சாப்பிடு லீலா'' குட்டியப்பன் சொன்னான்.

''சார், அதைப் பாக்க வேண்டாம். அவ பெரிசாச் சாப்பிடறவ இல்ல'' மாமிசத்தின் எலும்பை உறிஞ்சிக் கொண்டு தங்கப்பன் நாயர் சொன்னார்.

'இவளோட அம்மாவுக்கும் ஒரு பார்சல் வாங்கிடுங்க' என்று நினைவுபடுத்தினார் தங்கப்பன் நாயர்.

''நல்ல புருஷன்'' தங்கப்பன் நாயரைக் கட்டியணைத்துக் கொண்டு குட்டியப்பன் சொன்னான்.

குற்றிப்புறத்து லாட்ஜ் அறைக்குள் நுழைந்ததும் நான் குட்டி யப்பனிடம் சொன்னேன்: ''நான் இன்னைக்கு ராத்திரியே போனா என்னான்னு யோசிக்கிறேன்''

''அதென்னா ஏற்பாடு பிள்ளேச்சா?'' கையிலிருந்த சிகரெட்டை ஆழ்ந்து இழுத்து விட்டு குட்டியப்பன் சொன்னான்:''சும்மா படி வரைக்கும் கொண்டு வந்துட்டு தண்ணிக் கலத்தைப் போட்டு உடைக்காதீங்க""

''அதில்லே குட்டியப்பா...'' என்ன சொல்வதென்று தெரியாமல் சற்று நேரம் நான் பேசாமலிருந்தேன்.

''பிள்ளேச்சா, எனக்குப் புரிஞ்சு போச்சு. அந்தப் பொண்ணோட காரியந்தானே! அவளோட அப்பனுக்குத் தோணாத வருத்தம் பிள்ளேச்சனுக்கு எதுக்காகத் தோணணும். அதுதான் அதோட விதி. இப்போ நாம இல்லே வேறே யாரா இருந்தாலும் தங்கப்பன் நாயர் இதெல்லாந்ததான் சொல்லுவாரு. இதெல்லாந்தான் செய்வாரு.''

''குட்டியப்பனுக்கு அதெல்லாம் புரியாது'' நான் சொன்னேன்.

''அது சரிதான். என்னாவானாலும் பிள்ளேச்சன் போகக் கூடாது. நாளைக்கு ராத்திரி பதினோரு மணி முடிஞ்சா , தோ, படார்னு வயநாட்டிலேர்ந்து கோட்டயத்துக்கு ஒரே பிடி''

நான் ஒன்றும் சொல்லவில்லை. குட்டியப்பன் லைட்டை ஆஃப் பண்ணினான். எனக்குத் தூக்கம் வரவில்லை. வெளியில் வழியில் ஓடும் வண்டிகளின் சத்தம் இடையிடையே எட்டிப் பார்த்து விட்டுப் போனது.

''பிள்ளேச்சா'' குட்டியப்பன் கூப்பிட்டான்.

''என்னா?'' நான் கேட்டேன்.

''நாளைக்கு ராத்திரி லீலாவையும் நம்ம கூட வீட்டுக்குக் கூட்டீட்டுப் போறோம்''

''என்ன கிறுக்குப் பேச்சுப் பேசறே குட்டியப்பா?'' நான் கட்டிலை விட்டுத் துள்ளியெழுந்தேன்.

''அதுக்கு பிள்ளேச்சன் எதுக்காகப் பயப்படறீங்க? என் வீட்டுக்குத் தானே கூட்டீட்டுப் போறேன்''குட்டியப்பன் சிரித்துக் கொண்டே சொன்னான்.

''நாட்டுக்காரங்க என்ன சொல்லுவாங்க?''

''நாட்டுக்காரங்க என்னைப் பத்தி இனி சொல்றதுக்கு என்னா இருக்கு?சொல்ல வேண்டியதெல்லாம் சொல்லியாச்சே. அவன் வயசான காலத்தில ஒரு சின்னப் பொண்ணைக் கொண்டு வந்து வெச்சிருக்கிறான்னுதானே, சொல்லட்டுமே, ஆனா இந்தத் தகப்பன் கையில விட்டுட்டுப் போனா அது சரியாகாது''

அப்படீன்னா  நாலைக்குக் காலையிலேயே பொண்ணையும் கூட்டுகிட்டுப் போனா என்ன?''

''பிள்ளேச்சா, வயநாட்டுல யானை காத்திருக்காதா? தேவஸ்ஸி காத்திருக்கா மாட்டாரா? தவிர இப்படி ஒரு ஆசை நடக்கறதுக்காக நானும் காத்திருக்கேனில்ல. மொதல்ல காரியம் நடக்கட்டும். அப்புறம் நாம போலாம்''

''அப்போ, தகப்பனோ?''

''அதுக்கெல்லாம் வழியிருக்கு''

இருட்டில் குட்டியப்பனின் குறட்டை வண்டு முரல்வதுபோல என் தலைக்கு மேல் வந்து சுற்றிக்கொண்டிருந்தது. இருட்டுக்குப் பழகிய கண்களால் நான் குட்டியப்பனைப் பார்த்தேன். அவனுடைய பெரிய வயிறு, அந்த உடம்பிலிருந்து தப்பி மேலே தாவுவதுபோல உயர்ந்து தாழ்வதைப் பார்த்துக் கொண்டு இன்னும் கொஞ்ச நேரம் தூங்காமல் படுத்திருந்தேன்.

வயநாடன் கணவாய் ஏறும்போது குட்டியப்பன் லீலாவிடம் கேட்டான்: ''ஆர்க்கிமிடீஸ் தத்துவம் தெரியுமா?''

லீலா ஒன்றும் சொல்லவில்லை.

''சாக்ரடீசுக்கு விஷம் குடுத்தது யாருன்னு தெரியுமா?''

லீலா அதற்கும் ஒன்றும் சொல்லவில்லை.

தங்கப்பன் நாயர் லீலாவின் காலை அழுத்தி மிதித்து 'சொல்லுடி' என்று சொல்வதைக் கேட்டேன். நான் குட்டியப்பனை நிமிண்டி அழைத்து 'போதும்' என்றேன்.

தேவஸ்ஸிக் குட்டியின் வீட்டைத் தாண்டி வந்ததும் அங்கேயே வண்டியை நிறுத்தி விட்டு குட்டியப்பனும் தங்கப்பன் நாயரும் சேர்ந்து தேவஸ்ஸிக் குட்டியின் வீட்டுக்கு நடந்து போனார்கள். நான் வண்டிக்கு வெளியில் இறங்கி நின்றேன்.மெல்லிய குளிர் காற்று வந்தது.

''லீலாவோட நெசமான பேரென்னா?'' நான் கேட்டேன்.

லீலா எதுவும் சொல்லாமல் என் முகத்தைப் பார்த்தாள். ஒரு பெரிய துக்கம் அந்தக் கண்களிலிருந்து இப்போது கசிந்து இறங்கும் என்று நான் பயந்தேன்.

நான் வண்டியை விட்டுச் சற்றுத் தள்ளி நின்றேன். கொன்சம் கழித்து ஏதோ சத்தம் கேட்டுத்தான் திரும்பிப் பார்த்தேன். லீலா வண்டிக்குள்ளேயிருந்து தலையை வெளியே நீட்டி வாந்தி எடுத்துக் கொண்டிருந்தாள். நான் முதுகைத் தடவிக் கொடுத்தேன். வாந்தியெடுத்து முடிந்ததும் தண்ணீரை எடுத்துக் கொடுத்தேன். அவள் முகத்தைக் கழுவிக் கொண்டாள்.கொஞ்சம் குடித்தாள்.

''இவ்வளவு தூரமும் குலுங்கிக்குலுங்கி வந்ததுனால''என்றேன்.

லீலா என்னைப் பார்த்தாள். 

என்னால் அவள் முகத்தைப் பார்க்க முடியவில்லை.

சற்றுக் கழிந்து குட்டியப்பனும் தங்கப்பன் நாயரும் திரும்பி வந்து 'தேவஸ்ஸிக்குட்டி ராத்திரி வரச்சொன்னார்' என்று சொன்னார்கள். வண்டி ஒரு லாட்ஜ் அறை தேடி ஓட மானந்தவாடிக்கு வந்து சேர்ந்தது.

சூரியன் சுரமிறங்கியதும் குட்டியப்பன் தங்கப்பன் நாயரிடம் லாட்ஜில் இருந்தால் போதும் என்றும் லீலாவிடம் குளித்துவிட்டு வரும்படியும் சொன்னான். குட்டியப்பனும் நானும் அரைக்குப் போய்க் குளீத்தோம். அங்கேயிருந்து புறப்படும் முன்பு நான் குட்டியப்பனிடம் சொன்னேன்: '' அந்தப் பொண்ணுக்கு முடியலேன்னு தோணுது. ரொம்ப வாந்தியெடுத்தா"'

'', அவ்வளவுதானா? அது இப்ப குளிச்சதும் சரியாயிடும். பிள்ளேச்சா, நம்ம லீலாவோட உடுப்பு எப்படியிருக்கு?'' அக்குளில் பவுடர் போட்டுக் கொண்டே குட்டியப்பன் கேட்டான். எனக்கு எதுவும் சொல்லத் தோன்றவில்லை.

வண்டி தேவஸ்ஸிக் குட்டியின் வீட்டை நோக்கி ஓடும்போது திரும்பிப் பார்த்தேன். வண்டியின் சின்ன அசைவுகளுக்குத் பொருத்தமாக இருட்டும் அசைவதுபோலத் தோன்றியது. அந்தக் கருமையில் சிறிய வெளிச்சம்போல லீலா.

தேவஸ்ஸிக் குட்டியின் வீட்டு வாசலில் வண்டியை நிறுத்தினோம். காப்பிச் செடி பூத்திருப்பதன் மணம் என்னைப் பயமுறுத்தியது. இடையில் எப்போதோ கிழவியின் ஜன்னல் திறந்து மூடியது. அதிலும் இருட்டாக இருந்தது.

இருட்டுக்குள்ளேயிருந்து திடீரென்று தேவஸ்ஸி குட்டி வந்தான்.லீலாவை ஒருமுறை பார்த்துவிட்டு 'அப்படீன்னா நடங்க' என்று சொல்லி காப்பிச் செடிகளுக்கிடையில் நுழைந்தான். முன்னால் நடந்த வெளிச்சத்துக்குப் பின்னால் நாங்களும். காப்பி இலைகள்  வேசிகளைப் போலவும் அவர்கள் ஆளை நிமிண்டிக் கூப்பிடுவதுபோலவும் எனக்குத் தோன்றியது. கொஞ்ச தூரம் நடந்து முடிந்ததும் தேவஸ்ஸிக் குட்டி கையிலிருந்த வெளிச்சத்தைக் சிறிது உயர்த்தினான்.அந்த வெளிச்சம் போய் இரண்டு கொம்புகளில் கோர்த்துக் கொண்டு நின்றது. இரவு அளவுக்கு வளர்ந்த ஒரு கஜம். நான் பயந்து விட்டேன்.

''பிள்ளேச்சன் இந்தத் தேக்கு மரத்தோட மறைவில நின்னாப் போதும்'' குட்டியப்பன் சொன்னான்.

நான் தலையாட்டினேன்.

குட்டியப்பன் லீலாவையும் கூப்பிட்டுக்க்கொண்டு இன்னொரு மரத்தடிக்குப் போனான்.

யானையின் வாடை மெல்ல என்னைச் சுற்றி வந்து நின்றது. என்னுடைய இதயத் துடிப்பு தேக்கு மரத்தில் மோதித் திரும்பி வந்து கொண்டிருந்தது.

'துணி மாத்தியாச்சுன்னா இங்கே வரலாம்' என்று தேவஸ்ஸிக் குட்டி குட்டியப்பனைக் கூப்பிட்டுச் சொன்னான்.

குட்டியப்ப்னும் லீலாவும் நிர்வாணிகளாக யானைக்குப் பக்கமாகப் போவதைப் பார்த்தேன். தேவஸ்ஸி யானையின் தும்பிக்கையைத் தொட்டான். குட்டியப்பனும் யானையைத் தொட்டான். தேவஸ்ஸி யானையின் இடது கால் பக்கமாக நகர்ந்தான். குட்டியப்பன் லீலாவின் இரண்டு தோள்கலையும் பற்றிக் கொண்டு பின்பக்கமாக அவளை நடக்க வைத்தான்.  பிறகு யானையின் கொம்புகளுக்கிடையிலாக தும்பிக்கையோடு சேர்த்து நிறுத்தினான். அவளுடைய  தோள்களிலிருந்து கையை எடுத்தான். கொஞ்சம் பின்னால் தள்ளி வந்து யானையின் கொம்பில் இரண்டு கைகளாலும் இறுகப் பிடித்தான். நான் லீலாவைப் பார்த்தேன். தன்னுடைய உடல் சாய்ந்து நிற்பது எதன் மேல் என்று அவளுக்குத் தெரியாதா? தும்பிக்கையின் கூர்மையான ரோமங்கள் அந்த சின்ன சரீரத்தை இப்போது நோகச் செய்யத் தொடங்கியிருக்கும். யானையின் வாடை அவளுடைய உடல் முழுவதும் நொதிக்கத் தொடங்கியிருக்கும். இருட்டு பெரிய யானையின் உருவத்துடன் என்னைச் சூழ்ந்து வளர்வதுபோலத் தோன்றையது.

குட்டியப்பன் இப்போது தன்னுடைய பைத்தியத்தின் சிகரத்தில் முதல் அடியை வைத்திருப்பான். என்னுடைய கண்கள் குட்டியப்பனுக்கும் யானைக்கும் இடையிலிருக்கும் லீலாவின் மீது பதிந்து நின்ற்ன. ஒவ்வொரு நொடியின் ஓசையற்ற நடுக்கம் என்னுடைய கட்டை விரலிலிருந்து வளரத் தொடங்கி யிருந்தது.ஆனால் குட்டியப்பனின் சரீரம் அசையக் கூட இல்லை. அது லீலாவின் சரீரத்துக்கு எதிரில் நிற்க மட்டுமே செய்திருந்தது. பிறகு குட்டியப்பனின் கைகள் லீலாவின் கைகளோடு கோர்த்துக் கொண்டன. தும்பிக்கையிலிருந்து லீலாவை மெதுவாக விரித்து கொம்புகளுக்கிடையிலாக அவளை வெளியே நடக்க விட்டு ஒரு குழந்தை மீதான பாசம்போல அவளுடைய உச்சந்தலையில் முத்தமிட்டான். பிறகு குட்டியப்பன் திரும்பி நடந்தான். பின்னால் லீலாவும். பரிணாம எல்லையில் விசித்திரமான சித்திரம்போல முன்னால் அம்மணமான குட்டியப்பன், அம்மணமான லீலா. அதற்குப் பின்னால் பூமியில் மிகப் பெரிய மிருகம். நடப்பதற்கு
இடையில் திடீரென்றுதான் லீலா திரும்பி நின்றாள்.  ஒரு நொடியின் அரை மாத்திரையில் தன்னுடைய இணையை அணைப்பதுபோல நீண்டு வந்த தும்பிக்கை லீலாவை வளைத்து நின்றது. அது அவளை ஆகாயத்துக்கு உயர்த்தி கொம்பின் கூர்மையால் ராவியெடுத்தது. பிறகு கால்களுக்கிடையில் நுழைத்து இருட்டின் பேருருவம் பூண்ட அந்தப் பெரும்ஜீவன் புணர்வதுபோல லீலாவுக்குள் தன்னுடைய பாரத்தை இறக்கி வைத்தது.

@தமிழில்: சுகுமாரன் 1. வாரஸ்யார் வாரியார் சாதியைச் சேர்ந்த பெண்
 2. கள்ளி முண்டு கட்டம் போட்ட லுங்கி
 3. பறம்பு வீட்டையொட்டிய தோட்டம்
 4. யானைப் பிண்டம் யானைச் சாணம்
 5. பாப்பான் யானைப் பாகன்
 6. திருமுதல் ஆயுர்வேத சிகிச்சை
 7. எழுநள்ளிப்பு எழுந்தருளல்
 8. வரத்தன் வந்தேறி
 9. நிலவிளக்கு குத்துவிளக்கு
 10. தள்ளை தாய்
 11. பாண்டி லாரி தமிழ்நாட்டு லாரி
 12. அப்பப்பன் தாத்தா
 13. வல்யம்மச்சி பாட்டி
 14. அச்சன் பங்குத் தந்தை
 15. சிற வரப்பையொட்டிய குடியிருப்பு
 16. மழைக் கொச்சன் ஒரு பறவை. வயல்களில் யார் கண்ணிலும் படாமல் இருப்பது
 17. கண்டம் விளைநிலம்
 18. காவளங் காளி மைனா போன்ற பேசும் பறவை
 19. மருந்து கஞ்சா
 20. வடியாயிடு தப்பி விடு
 21. குறுக்கர்கள் போலீஸ்காரர்கள்
 22. ஜேம்ஸ் கஞ்சாவின் குழூஉக் குறி

 ’லீலை’ சிறுகதை உயிர்மை இதழிலும் பின்னர் பன்னிரண்டு மலையாளக் கதைகள்  தொகுப்பின் தலைப்புக் கதையாகவும் வெளியானது. இதழில் கதைக்கு ஓவியம் வரைந்த ரோஹிணி மணியே புத்தகத்துக்கும் முகப்பை வரைந்து வடிவமைத்தார். 
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக