புதன், 20 ஜனவரி, 2010

நதிப் பேச்சு

கரையிலமர்ந்து
ஓடும் ஆற்றைப் பார்த்துக்கொண்டிருந்தாள்
அவளுடன் பேசிக்கொண்டிருந்தது ஆறு.

ஆற்றில்
எல்லாம் ஓடிக்கொண்டிருந்தன
காற்று ஓடிக்கொண்டிருந்தது
மரங்கள் ஓடிக்கொண்டிருந்தன
பறவைகள் ஓடிக்கொண்டிருந்தன
மேகங்கள் ஓடிக்கொண்டிருந்தன
சூரியன் ஓடிக்கொண்டிருந்தது.

தெருக்கள் ஓடிக்கொண்டிருந்தன
வீடுகள் ஓடிக்கொண்டிருந்தன
அவளும் ஓடிக்கொண்டிருந்தாள்.

அவள் ஓடிக்கொண்டிருந்தபோது
காற்றும்
மரங்களும்
பறவைகளும்
மேகங்களும்
சூரியனும்
ஓடாமல் நின்றன.

அவள் வீடு திரும்பியபோது
ஓடாமலிருந்தது ஆறு
ஓடிக்கொண்டிருக்கிறாள் அவள் மட்டும்
ஆற்றுடன் பேசிக்கொண்டே.

1 கருத்து:

  1. தவித்து கிடக்கிறேன் ...
    அவளையும் ஆற்றையும் கவிதையும் நினைத்து...

    பதிலளிநீக்கு