புதன், 21 செப்டம்பர், 2011

அஸீஸ் பே சம்பவம்


துருக்கி மொழியில் குறிப்பிடத்தக்க பெண் எழுத்தாளரான அய்ஃப்ர் டுன்ஷ் எழுதிய நாவல் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன் தனது இணையத்தில் - பார்த்தேன் படித்தேன் - பகுதியில் பரிந்துரைத்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றி. அவருடைய குறிப்பு இங்கே.








அஸீஸ் பே சம்பவம்

அய்ஃபர் டுன்ஷ் என்ற துருக்கிய எழுத்தாளரின் நாவலான அஸீஸ் பே சம்பவம், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பில் வெளியாகி உள்ளது, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நாவல் சமகால துருக்கிய இலக்கியத்தில் முக்கியமான ஒன்று,

துருக்கிய நகரமொன்றின் மதுவிடுதியில் இசைக்கலைஞனாக உள்ள அஸீஸ் பேயின் வாழ்வை விவரிக்கும் இந்த நாவலின் இரண்டு மையப்புள்ளிகள் இசையும் காதலும், காதலின் அவஸ்தையும் அங்கீகரிக்கப்படாத இசையின் துயரநிலையும் நாவல் விவரிக்கிறது

மிலன் குந்தேராவின் நாவல் போல கதாபாத்திரங்களுக்கு இடையே உள்ள உறவையும் ஆழமான மனஉணர்ச்சிகளையும் நாவல் முதன்மைபடுத்துகிறது, அய்ஃபர் டுன்ஷ் நாவல் இந்திய மொழிகளில் முதன்முதலாக தமிழில் தான் வெளியாகியிருக்கிறது,

சுகுமாரனின் மொழிபெயர்ப்பு மிகச்சிறப்பானது, இசையும் கவித்துவமும் நிரம்பிய நாவலை நுட்பமாக மொழியாக்கம் செய்திருக்கிறார், துருக்கிய இசை மற்றும் இலக்கியங்களின் ஆழ்ந்த அனுபவம் இன்றி இது போன்ற மொழியாக்கத்தைச் செய்வது சாத்தியமானதில்லை, சுகுமாரன் துருக்கிய இசை மற்றும் இலக்கியத்தை ஆழ்ந்து அறிந்தே மொழியாக்கம் செய்திருக்கிறார் என்பதை மொழிபெயர்ப்பின் சரளம் மற்றும் சொற்பிரேயோகங்கள், கதையின் ஆதாரத்தொனியின் வழியே நன்றாக அறிய முடிகிறது,

அவசியம் வாசிக்க வேண்டிய நாவலிது.


http://www.sramakrishnan.com/?p=2588

••

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக