செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

மரினா ஸ்வெதயேவா கவிதைகள்
1

நெற்றியில் முத்தமிடுவது...

நெற்றியில் முத்தமிடுவது வேதனையைத் துடைப்பதற்காக
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்

கண்களில் முத்தமிடுவது உறக்கமின்மையை நீக்குவதற்காக
நான் உன் கண்களில் முத்தமிடுகிறேன்

உதடுகளில் முத்தமிடுவது நீர் அருந்துவதற்காக
நான் உன் உதடுகளில் முத்தமிடுகிறேன்

நெற்றியில் முத்தமிடுவது ஞாபகத்தைத் துடைப்பதற்காக
நான் உன் நெற்றியில் முத்தமிடுகிறேன்.2

இரண்டு சூரியன்கள் குளிரவைத்துக்கொண்டிருக்கின்றன...

இரண்டு சூரியன்கள் குளிரவைத்துக்கொண்டிருக்கின்றன,
கடவுளே, என்னைக் காப்பாற்றும்.
ஒன்று - சொர்க்கத்தில், மற்றது - இதயத்தில்.
இதற்கொரு காரணமுண்டா என்னிடம்?
இரண்டு சூரியன்களும் என்னை முழுப்பைத்தியமாக்கின.
அவற்றின் கதிர்களில் வேதனையில்லை - எல்லாம் போயின.
தகிக்கும் சூரியனே முதலில் உறைந்து போகும்.3

ஒவ்வொரு கவிதையும் அன்பின் குழந்தை


ஒவ்வொரு கவிதையும் அன்பின் குழந்தை
கைவிடப்பட்ட வேசியின் பிழை
மேலே காற்று அலைய
சாலையோரத்தில் விடப்பட்ட சந்ததி
இதயத்தில் ஓர் ஆழக்கடலும் ஒரு பாலமும் உண்டு
இதயத்தில் வாழ்த்தும் துக்கமும் உண்டு
யார் அதன் தகப்பன்? நிலவுடைமையாளனா?
ஒருவேளை நிலவுடைமையாளனாகவோ அல்லது
திருடனாகவோ இருக்கலாம்.4

உனது ஆன்மா...

உனது ஆன்மா சிறகுகளுடன் பிறந்திருக்குமானால்
குடிசைக்கோ அரச மாளிகைக்கோ என்ன பொருள்?
செங்கிஸ்கான் என்ன? கொள்ளைக்கூட்டம் என்ன?
மொத்த உலகத்தில் எனக்கு இரண்டு எதிரிகள் இருக்கிறார்கள்
அவர்கள் ஒரே படிமத்தில் இணைந்த இரட்டைப் பிறவிகள் -
பசியின் பசியும் பெருந்தீனியின் பெருந்தீனியும்.

@

2 கருத்துகள்:

  1. நான்குமே கவர்கின்றன. பகிர்வுக்கு நன்றி.
    3 வது பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது
    மரினா பற்றிய மற்ற விவரங்கள் கிடைக்குமா?

    பதிலளிநீக்கு
  2. வேல்கண்ணன், நன்றி. விரைவில் மரினா ஸ்வெதயேவா பற்றிய கட்டுரையை பதிவேற்றம் செய்யப் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு