செவ்வாய், 4 மே, 2010

எப்போது?நேசத்துடன்
என்னிடம் நீ பிரியத்தை சொன்னது எப்போது?

மொழியறியாத் தெருக்களில்
திசைதெரியாது அலைந்தேனே
அப்போதா?

பரிவுடன்
என்னை நீ தொட்டது எப்போது?

எரியும் வீட்டிலிருந்து
துள்ளித் தெறித்து வெளியேறினேனே
அப்போதா?

கரிசனத்துடன்
என் கைகளைப் பற்றியது எப்போது?

எவருக்கும் தர எதுவுமில்லாமல்
என் வலது கரத்தைத் துண்டித்தேனே
அப்போதா?

கனிவுடன்
என் முகத்தைப் பாத்தது எப்போது?

பயத்தின் இருளில் யாரும்
பார்த்துவிடக் கூடாமல் மறைந்திருந்தேனே
அப்போதா?

உன்னை விடப் பெருங்கருணையுடன்
நானிருந்த அமர நொடிகளில்
இல்லாமற் போனாயே
அது மறதியா, பதுங்கலா?

4 கருத்துகள்:

 1. மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே கேட்டுக்கொண்டே இருக்கிறேன்
  இம்மாதிரியான கவிதையில் இருந்து மீள்வது எப்போது ? அல்லது மீள வேண்டுமா ?

  பதிலளிநீக்கு
 2. கோவை மாவட்ட தெற்கு மண்டல செயலாளர்கு தெறியப் படுத்தாமல் வலைப்பூ ஆரம்பித்த சுகுமாரனை வன்மையாக கண்டிக்கிறோம். இனி அவர் கலந்துகொள்ளும் கூட்டங்களில் குடித்து விட்டு ரகளை செய்வது என்று நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானன் நிறைவேற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. //உன்னை விடப் பெருங்கருணையுடன்
  நானிருந்த அமர நொடிகளில்
  இல்லாமற் போனாயே
  அது மறதியா, பதுங்கலா? // அற்புதமான வரிகள்...வலிகள்..

  பதிலளிநீக்கு
 4. ////உன்னை விடப் பெருங்கருணையுடன்
  நானிருந்த அமர நொடிகளில்
  இல்லாமற் போனாயே
  அது மறதியா, பதுங்கலா? ////

  அருமை..

  பதிலளிநீக்கு