ஞாயிறு, 3 மே, 2015

நான் பறக்கும் மீன்

ழுகடல் நீந்திவந்த மீனிடம்
கண்ணாடிப் பேழைக்குள்ததும்பும் நீரைக்காட்டி
ஏழைவிடப் பெரிய சமுத்திரம் என்கிறாய்

எண்திசை கடந்து வந்த பறவையிடம்
கம்பிக்குள் சிக்கிய வானைக்காட்டி
அளவற்ற ஆகாயம் என்கிறாய்

மூடாத விழிகளால் சிரிக்கிறது மீன்
படபடக்கும் சிறகுகளால் சிரிக்கிறது பறவை

விழிமூடி
வெளியைத் துழாவிச் சிரிக்கிறேன் நான்

நானே அந்த நீச்சல்
நானே அந்தப் பறத்தல்.


(மே 2014 )கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக