ஞாயிறு, 3 மே, 2015

ஈரம்றிவிப்பில்லாமல் வந்த கனமழையில்
இருண்டன புறங்கள்
சட்டென்று இரவானது பகல்

ஆங்காரக் காற்றில் அதிர்ந்து நடுங்கி
இலைகளை உதிர்த்தது
முற்றத்து  மரம்

அகால மழை அவசரமாக விடைபெற்றதும்
மீண்டது பகல்

திசைகள் பெருமூச்சு விட்டன

கிளையில் மிஞ்சிய
ஒரேயொரு தளிரை
ஈரம்போகத்  துவட்டிக் கொண்டிருக்கிறது
வெயில்.


ஏப்ரல் 2015

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக