ஞாயிறு, 3 மே, 2015

காதல் கவிதை
ப்புக்குள் ஒளிந்திருக்கும்
ஓயாத அலைகளை எழுப்பி
சமுத்திரத்தை உண்டாக்குவது...

கல்லுக்குள் மறைந்திருக்கும்
திட சித்தத்தைச் சேர்த்து அடுக்கி
மலையைச் சமைப்பது...

எப்போதோ விழுங்கியும்
தொண்டையை விட்டு இன்னும் இறங்காத
விஷத்தை வடித்து அமிர்தத்தைத் திரட்டுவது...

பெருமக்களே
பெண்ணைக் காதலிப்பதென்றால்
இவையெல்லாம் தான்.

மின்சார இஸ்திரிப் பெட்டி
சூடேறிவிட்டதா என்று
விரலில் எச்சில் தொட்டுப் பரிசோதிப்பதும்

இதில் சேர்த்திதான். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக