திங்கள், 29 ஜூன், 2020

சீனக் கவிதை




நீ பிறந்தபோது நான் இல்லை
நான் பிறந்தபோது உனக்கு வயதாகியிருந்தது
நான் தாமதமாகப் பிறந்தேன் என்று நீ வருந்துகிறாய்
நீ முன்பே பிறந்துவிட்டாய் என்று நான் வருந்துகிறேன்

நீ பிறந்தபோது நான் இல்லை
நான் பிறந்தபோது உனக்கு வயதாகியிருந்தது
நான் சேர்ந்தே பிறந்திருக்கலாம் என்று விரும்பினேன்
நம் காலத்தை சேர்ந்தே களித்திருக்கிலாம் என்று விரும்பினேன்.

நான் பிறந்தபோது நீ இல்லை
நீ பிறந்தபோது எனக்கு வயதாகியிருந்தது.
உன்னிடமிருந்து வெகு தொலைவில் நான் இருந்தேன்
என்னிடமிருந்து மிக தூரத்தில் நீ இருந்தாய்.

நான் பிறந்தபோது நீ இல்லை
நீ பிறந்தபோது எனக்கு வயதாகியிருந்தது.
மலர் தேடும் வண்ணத்துப் பூச்சியாக இருந்தேன்
இரவுதோறும் வாசனைப் புற்கள் மீது உறங்கினேன்.

@

சீனாவில், தாங் அரசமரபுக் காலத்தில் ( 618 – 907 ) எழுதப்பட்ட கவிதை.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக